Monday, September 17, 2012

Vethith thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -கால்சியம் -தொடர்ச்சி கட்டுமானப் பயன்பாடு
கால்சியத்தின் கட்டுமானப் பொருட்களான கால்சியம் கார்போனேட் என்ற சுண்ணாம்புக்கல் கால்சியம் ஆக்சைடு என்ற சுண்ணாம்பு(சுண்ணாம்புக் கல்லைச் சூடு படுத்தக் கிடைப்பது),கால்சியம் ஹைட்ராக்சைடு என்ற நீர்த்த சுண்ணாம்பு allathu சுண்ணாம்பு நீர் (Slaked lime) போன்றவை வீடு கட்ட உதவும் காரை (Mortar) (நீர்த்த சுண்ணாம்பும் மணலும் நீரும் கலந்த கலவை),சிமெண்டு,மார்பிள்,ஜிப்சம் போன்ற கட்டுமானப் பொருட்களை வழங்கியுள்ளன.மார்பிள்,ஜிப்சமும் கால்சியத் தாதுக்களாகும். மார்பிள் என்பது கால்சியம் கார்போனேட் ஆகும்.இது அமிலங்களுக்கு மிகவும் உணர் திறன் கொண்டது .கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்டே ஜிப்சமாகும். இதை 120 டிகிரி C வரை சூடு படுத்த ஜிப்சம் நீரை இழந்து பாதி ஹைட் ரேட் டாக உருமாறுகிறது. இதையே பட்டிச் சாந்து (Plaster of Paris) என்பர்.இதை நீருடன் கலக்கும் போது அது அரை மணி நேரத்தில் ஜிப்சமாகத் திடமாக உறைகிறது.சிலைகளுக்கான வார்ப்புகள் ,வீட்டுச் சுவர் பூச்சு ,உட் கூரைகளில் தர்காலியத் தள வரிசை,எலும்பு முறிவிற்கான மாக் கட்டு போன்றவைகளுக்கு இது பயன் தருகிறது. ஜிப்சம் படிக வடிவில் கிடைக்கும் போது அதை அலபாஸ்டர் (alabaster)என அழைக்கின்றார்கள்.இது ஒளி உட்புகும் தன்மை கொண்டது ; சிலை வடிக்கப் பயன்படுகிறது; கண்ணாடியை உலோகத்துடன் இணைப்பதற்கு ஜிப்சம் பயன்படுகிறது. அமோனியம் சல்பேட் என்ற உர உற்பத்தி முறையில் ஜிப்சம் ஒரு மூலப்பொருளாகும் . கால்சியத்தின் பிற பயன்கள் சுண்ணாம்புக் கல்லைச் சூடுபடுத்தி உயர் வெப்ப நிலையில் இருத்தி வைத்தால் அது இளம் நீல நிற ஒளியைத் தருகிறது. இதை வெப்ப ஒளிர்தல் (thermo luminescence) என்பர். முற்காலத்தில் இவ்வொளி திரைப் படப் பிடிப்பில் பயன்படுத்தப் பட்டது . சுண்ணாம்புடன் இரும்புத் தாதுவைக் கலந்து வெடிப்புலையில் வைத்து சூடு படுத்துவார்கள்.சுண்ணாம்பு வேற்றுப் பொருட்களுடன் சேர்ந்து உருகிய கண்ணாடி போன்ற கசடை உருவாக்குகின்றது. இது உலையின் அடிப்பக்கத்தில் சேருவதால் அதைத் தனித்துப் பிரித்துவிட முடிகிறது. தெளிந்த சுண்ணாம்பு நீரை கார்பன் டை ஆக்சைடு பால் போல் வெண்மையாக்கி விடுகிறது. எனவே கார்பன் டை ஆக்சைடு வளிமத்தின் செழுமையைச் சோதிக்க இது பயன் தருகிறது.இது வெளுப்புக் காரம் உற்பத்தி ,தோல் பதனிடுதல்,சக்கரை சுத்திகரிப்பு,எரி வளிமம் சுத்திகரிப்பு,கண்ணாடி உற்பத்தி,மென்நீராக்கும் வழிமுறை,சுவர்களுக்கான வெள்ளைப் பூச்சு போன்றவைகளுக்காகப் பயன்படுகிறது. கால்சியம் குளோரைடு வளிமங்களை வறட்சிப் படுத்தவும்,உணவுப் பண்டங்கள் கேட்டுப் போய் விடாமல் பாதுகாக்கும் ஒரு வேதிப் பொருளாகவும் பயன் படுகிறது. கால்சியம் பாஸ்பேட்,கால்சியம் சல்பேட் கலவை ஒரு சிரான் து உரமாகும்.இது நீரில் கரைவதில்லை. ஆனால் அடர் கந்தக அமிலத்தில் இட்டால் அது சுண்ணாம்பின் சூப்பர் பாஸ்பேட்டாகி விடுகிறது. இது உடனடியாக நீரில் கரையக் கூடியதாக இருப்பதால் தாவரங்களுக்கு உடனடியாகக் கிடைகிறது.கால்சியம் நைட்ரேட் உரம்,வெடிகள்,தீக்குச்சி,பட்டாசுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.கால்சியம் புளூரைடு உலோகவியலில் உருக்க வேண்டிய பொருளின் உருகு நிலையைக் குறைக்கப் பயன் படுகிறது. கால்சியமும் உடல் நலமும் கால்சிய சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் தேவை.பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவும்,இதயத் துடிப்பு மிகவும் துல்லியமாகச் சீராக இருக்கவும் ,இரத்தம் உறைவதைத் தூண்டி வெட்டுக் காயங்களிலிருந்து இரத்தம் வீணாக வெளியேறுவதைத் தடுக்கவும் இந்த கால்சியம் துணை புரிகிறது. தசைகளின் விரிதல்- சுருங்குதல் இயக்கம்,இவ்வியக்கங்களில் சீரான இயக்கம் (rhythm) இதயத் தசையின் நெகிழ்வு ,நரம்பு வழிச் செய்திப் பரிமாற்றம் போன்றவற்றிற்கும் கால்சியம் இன்றியமையாததாகும் .வளர் சிதை மாற்ற வினைகளிலும் கால்சியம் பங்கேற்றுள்ளது . கால்சியம் உட்கவர்தல் எனபது கால்சியத்தின் செரிமானத்தைப் பொறுத்தது .உணவு செரிக்கப் படும்போது ஊடகத்தின் தன்மை அமில நிலையா அல்லது கார நிலையா என்பதைப் பொறுத்தது.உணவாக உட்கொள்ளப்படும் கூடுதல் பாஸ்பேட்டுகள்,கார நிலையில் கரைவுரா டிரை கால்சியம் பாஸ்பேட்டாக மாறி விடுவதாலும்,அமில நிலையில் கரைவுறு கால்சியம் பாஸ்பேட்டாக மாறி விடுவதாலும் கால்சியம் செரிமானத்திற்கு அமில நிலையே உகந்தது. எனவே கார நிலையில் குறைந்த அளவு கால்சியம் கூட உடலால் உட்கிரகித்துக் கொள்ளப் படாமல் உபரியாகி விடுகிறது.இவை வெளியேற்றப் படும் போது சிறு நீரகப் பகுதிகளில் கல்லாகப் படியும் வாய்ப்பைப் பெறுகின்றது.சிறு நீரகக் கல்லில் தாழ்ந்த மூலக்கூறு என்டையுடன் கூடிய கால்சியம்,ஆக்சிலேட்,பாஸ்பேட்டுகள்,கார்போனேட்டுகள்,யுரேட்டுகள் போன்றவையுள்ளன.சிறு நீரகக் கல்லை அறுவைச் சிகிச்சை ,சிறு நீரக அகநோக்கி (endoscope) கேளா ஒலி (ultrasonic) போன்றவற்றால் அகற்றிக் கொள்ள முடியும் .

No comments:

Post a Comment