Monday, September 24, 2012

Vethith thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -ஸ்காண்டியம் (Scandium ) - கண்டுபிடிப்பு

தனிம அட்டவனையை மென்டலீவ் நிறுவும் போது போரான் தொகுதியில் ஒரு நிரப்பப்படாத கட்டத்தில் இருக்க வேண்டிய இன்னும் கண்டுபிடிக்கப்படாத தனிமத்தின் பெயரை ஏக போரான் என்றும் அதன் அணு நிறை கால்சியம் 40 க்கும் டைட்டானியம் 48 க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என முன்கூட்டியே அறிவித்தார் .1876 ல் ஸ்வீடன் நாட்டு வேதியலாரான நெல்சன் (L.Nelson) என்பார் ஸ்காண்டிநேவியா என்ற பகுதியில் கிடைக்கும் கடோலினைட் போன்ற சில குறிப்பிட்ட கனிமங்களிலிருந்து ஸ்காண்டியத்தைக் கண்டுபிடித்தார் எனினும் நெல்சனின் பல ஆய்வு முடிவுகள் பிழையாக இருந்தன. மூன்று பிணைதிறன் (Valency ) கொண்ட ஸ்காண்டியத்திற்கு பிணைதிறன் 4 என்று மதிப்பிட்டு அதன் ஆக்சைடை ScO2 என்று தவறாகக் குறிப்பிட்டார். இதன் அணு நிறையைச் சரியாக மதிப்பிடாமல் 160 -180 க்குள் இருக்கும் என நெடுக்கை அளவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது டின்னுக்கும், தோரியத்திற்கும் இடைப்பட்டது என்று வேறு அறிவித்தார். இதன் பிறகு அதே நாட்டைச் சேர்ந்த கிளிவ் (P.Cleve) என்ற விஞ்ஞானி இதை முழுமையாக ஆராய்ந்து அதன் ஆக்சைடு Sc2O3 என்று கண்டுபிடித்ததோடு அது மென்டலீவ் தெரிவித்த ஏக போரான் என்றும் தெளிவு படுத்தினார். இதனால் இந்த உலோகத்தின் கண்டுபிடிப்பில் இவருடைய பெயரும் இணைந்தது.

ஸ்காண்டியம் பூமியில் மிகக் குறைவாகவே செழுமை யுற்றிருந்தாலும் சூரியனிலும் ஒரு சில விண்மீன் களிலும் ஓரளவு செழிப் புற்றிருப்பது தெரிகின்றது செழுமை வரிசையில் ஸ்காண்டியம் சூரியனில் 23 ஆகவும் பூமியில் 50 ஆகவும் உள்ளது . இது பூமியின் மேலோட்டுப் பகுதியில் எங்கும் பரவலாகக் காணப்படுகின்றது.

 உலோக நிலையில் தூய ஸ்காண்டியத்தை 1937 ல் பிஷர், பிருன்கர்,கிரினெய்சென் (Fischer, Brunger and Grieneisen) போன்ற விஞ்ஞானிகள் ஸ்காண்டியம் குளோரைடுடன் 700 -800 டிகிரி C வெப்ப நிலையில் பொட்டாசியம் ,லித்தியம் இவற்றைக் கலந்து உருக்கி மின்னார் பகுப்பு மூலம் உற்பத்தி செய்தனர். டங்ஸ்டன் கம்பியும் உருகிய துத்தநாகக் குழம்பும் கிராபைட் குப்பியில் மின்வாய்களாகப் பயன்படுத்தப் பட்டன.

பண்புகள்

தூய புதிய ஸ்காண்டியம் வெள்ளி போன்ற வெண்ணிறப் பளபளப்பு க் கொண்டிருந்தாலும் ,காற்று வெளியில் மஞ்சள் அல்லது ரோஸ் நிறமாக மாறிவிடுகிறது .இது ஓரளவு மென்மையானது .அருமன் உலோகங்களைப் போலவும்,எட்ரியம் போலவும் இன்னும் அதிகமாக அலுமினியம் அல்லது டைட்டானியம் போலவும் இருக்கிறது.இது லேசான உலோகமாக இருப்பினும் அலுமினியத்தை விட அதிக உருகு நிலையைப் பெற்றிருக்கிறது ஸ்காண்டியத்தின் அணு எண் 21 ,அணு டை 44.96 .இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1812 K,3000 K உள்ளது; அடர்த்தி 3000 கிகி /கமீ.

பயன்கள்

இது விண்கலங்களின் கட்டமைப்பு ,விண்வெளி ஆய்கருவிகளில் அனுகூலமிக்கதாக இருக்கிறது. ஸ்காண்டியம் ,1 :1 விகிதத்தில் கலப்புள்ள அடர் நைட்ரிக் அமிலம் மற்றும் 48 % ஹைட்ரஜன் புளூரைடு கரைசலால் பாதிக்கப் படுவதில்லை ஸ்காண்டியத்தில் உள்ள டான்டலத்தைக் கரைப்பதற்கு இக் கரைசல் பயன்தருகிறது.

பெர்லியம் சிலிகேட் என்ற பெரைலில் சிறப்பு நிறமூட்டஸ்காண்டியம் பயன்படுகிறது. பெரைலினின் நீல நிறத்திற்கு ஸ்காண்டியம் காரணமாக இருக்கிறது.

No comments:

Post a Comment