Saturday, June 22, 2013

creative Thoughts

47. முன் திட்டமிடத் தவறினால் அது செய்யப் போகும் செயலைத் தவற விடுவதற்கு முன் திட்டமிட்டதாகி விடும் 
48.நீ யார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றாயா ? கேட்காதே, பேசாமல் செயல்பாடு.உன்னுடைய செயல்களே உன்னைப்பற்றி உனக்கு மட்டுமல்ல உலகுக்கே தெரிவிக்கும்.

49.புதிய புதிய சிந்தனைகள் பூப்பதற்கே புதிய நாட்கள் மீண்டும் மீண்டும் விடிகின்றன. 

50. படைப்பாற்றல் மிக்கோர் சாதிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த துடிப்புடன் செயல்படுவார்கள்.அவர்கள் ஒருபோதும் மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ள வேண்டும்  என்ற நோக்கத்தைக் கொண்டிருப்பதில்லை
51.யானையை அடக்கி ஆளத் தெரிந்தவனுக்கு வீட்டில் பூனையை வளர்க்கத் தெரியாது.

52.வழக்கமான கல்வி உலகில் வாழக் கற்றுக் கொடுக்கும்.சுய கல்வி அவ்வப்போது அதிர்ஷ்டத்தை அழைத்துக் கொண்டு வரும்.

53.வெற்றி பெறுவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் தோல்வியை எப்படித் எதிர் கொள்வது ,தவிர்த்துக் கொள்வது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.தோல்வியைப் தவிர்ப்பது தான் வெற்றி என்றாலும் வெற்றிமுயற்சிகளுக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்பு,
தோல்வியைத் தவிர்ப்பது அறிவின் கையிருப்பு. 

54.எது சரியான பாதை என்பதைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அப்புறம் வெறும் நடைப்பயணம்தான்.தொலைவு வ்வளவு இருந்தாலும் கடப்பது ஷ்மில்லை

 .

No comments:

Post a Comment