Monday, June 17, 2013

Micro aspects of developing inherent potentials

Micro aspects of developing inherent potentials

ஒரு துறையில் ஈடுபட்டு அதில் சாதிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு அத்துறையில் மென்மேலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க ஆர்வப்படுவதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை.தொடக்கத்தில் இருக்கும் ஆர்வம் இறுதி வரை தொடர்வதில்லை.அதனால் சாதிப்போர் வெகு சிலராகி வருகின்றார்கள்.ஒரு குறிப்பிட்ட ஆர்வம் பிற ஆர்வங்களினால் நிறம் மாறிப்போவதே இதற்குக் காரணமாகின்றது .பெரும்பாலானோரிடம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் கொள்ளும் ஆர்வம் தன் விருப்பத் துறையில் இருக்கும் ஆர்வத்தை மட்டுப்படுத்திவிடுவதற்கு ஒரு வலிமையான காரணமாக இருக்கிறது .
இன்றைக்கு பொழுதுபோக்கினால் கிடைக்கும் சுகத்தை அனுபவிப்பேன்.இன்னும் காலம் இருக்கிறது, அப்போது தன்விருப்பத் துறையில் ஈடுபட்டு எல்லாவற்றையும் செய்து முடிப்பேன் என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்ளலாம். ள்ளிப்போடும் எந்த வேலையும் சிப்பாச் செய்து முடிக்கப்படுவதில்லை.பலர் இந்த எண்ணத்தினால் ,சராசரி வாழ்க்கையே தனக்கு அளிக்கப்பட்டது என்று முடிவு செய்து விட்டு பிற்காலத்தில் எதையும் சாதிக்கத் தவறிவிடுகின்றார்கள்.
காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை நிர்ணயித்துக் கொண்டிருக்கும்.இந்த எல்லையைத் தாண்டி யார் புகுந்தாலும் அவர் அந்த விலங்கால் தாக்குதலுக்கு ஆளாவார் .இந்த உண்மையை வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் .அது போல நம்முடைய எண்ணங்களுக்கும் ஒரு பாதுகாப்பு வளையமுண்டு .இந்த வளையத்தைத் தாண்டி மற்றொரு எண்ணம் ஊடுருவிச் செல்ல அனுமதிக்காத வரை கொண்டுள்ள ஒவ்வொரு எண்ணமும் தனித்து வலுப்பெற்று வளம்பெறும் .
தன் விருப்பத் துறையில் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டாலும் எளிதில் சோர்வடைவதில்லை.விருப்பத் துறையில் ஆர்வம் அதிகரிக்க பிற துறைகளில் நாட்டம் ஏற்படுவதில்லை.

ஆர்வப்படாமல் பெரிய ,அரிய காரியங்களை யாராலும் செய்து முடிக்க முடியாது .திறமையை வளர்த்துக் கொள்ளவும் ,ஒரு குறிப்பிட்ட துறையில் முன்னிலை அடையவும் பயனுள்ள எதையாவது செய்யக் கூடிய ஆற்றல் பெறவும் வற்றாத  ஆர்வம் இருக்க வேண்டியது அவசியம் 
ஆர்வமின்றி எதைச் செய்தாலும் அது கடினமான செயலாகத்தான் தோன்றும்.எளிமையும்,கடுமையும் செய்யப்படும் செயலில் இல்லை. அது மனதில் தங்கியிருக்கும் ஆர்வத்தைப் பொறுத்தது .
ஆர்வம் கொள்வதற்கு சில அடிப்படைகளை நாம் விடாது மேற்கொள்ளவேண்டும் .அவை ஆர்வப்படுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கின்றன.உணர்வுருப்புக்களைக் கொண்டு அதிகமாகத் தெரிந்து கொள்ளவும் ,புரிந்து கொள்ளவும் வேண்டும் .தெரிந்து கொள்வதை விட,அறிந்து கொள்வதை விடப் புரிந்து கொள்வது ஆர்வப்படுவதற்கு அவசியமானது .தூண்டப்படும் ஆர்வத்தை  விட தன் ஆர்வம் மிகவும் வலிமையானது, செயல் திறன் மிக்கது .தூண்டப்படும் ஆர்வம் என்பது அயல் மொழிக் கல்வி என்றால் தன்னார்வம் தாய் மொழிக் கல்வி போன்றது. தூண்டப்படும் ஆர்வம் தன்னார்வமாக நிலை மாற்றம் அடையாத வரை  முன்னேற்ற வீதத்தில் அதிக மாற்றம் விளைவதில்லை 


No comments:

Post a Comment