Wednesday, June 5, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம்

படித்து முடித்து ஏதாவதொரு வேலையைத் தேடிக்கொண்டு வாழ முயற்சி செய்யும் இளைஞர்கள் பலர் சரியான வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டே வாழ்கையின்  முக்கியமான  பகுதியை வீணாக்கி விடுகின்றார்கள்.வேலை கிடைத்தாலும் அதில் திருப்பதியடைவதில்லை .இந்தியாவில் சரியாக முன் திட்டமிட்டு நேர்மையாக வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் அரசு அக்கறை காட்டுவதில்லை.சாதனை என்று சொல்லிக்கொள்வதற்காக தற்காலியமான,முக்கியத்துவமில்லாத வேலை வாய்ப்புக்களே உருவாக்கப்படுகின்றன.வேலை வாய்ப்புக்களில் கூட திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.நாட்டின் முன்னேற்றத்தை ஒரு மில்லி மீட்டர் கூட நகர்த்தாத வேலைகள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நம் கண் முன்னே சீர்குலைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
எல்லோரும் அரசு வேலையை எதிர்பார்த்து பிற வாய்ப்புக்களை தவற விட்டுவிடுகின்றார்கள்.அதைப் பற்றி நினைப்பதுமில்லை. அரசு வேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் கடமையாற்றாமலேயே ஊதியமும் உரிமைகளையும் பெறுவதற்கு அங்கே அதிக வாய்ப்பிருப்பதாக எல்லோரும் நினைப்பது கூ அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் .வாழ நினைத்தால் வாழலாம் நேர்மையாகவும் வாழலாம் அதற்கு வழிகளா இல்லை நாம் வாழும் இந்த பூமியில் .இதில் இளைஞர்களுக்கு 
நம்பிக்கை வருமாறு அரசு உறுதியான விரிவான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது நாட்டின் ஒரு பலவீனமே .
இன்றைக்கு நாட்டில் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்துவிடவேண்டும் என்று முறைகேடான வழிகளைப் பின்பற்றுவோர் பெரும்பான்மையினராகி வருகின்றார்கள் .குறுக்கு வழியில் எளிதாகச் சம்பாதித்த பணத்தைக் கொண்டே சட்டம்.காவல்,கண்காணிப்பு என இருக்கும் வலுவற்ற தடைகளை எளிதாகச் சமாளிக்க முடிவது அவர்களது வளர்ச்சிக்கு பக்க பலமாக இருக்கிறது .நேர்மையாகத் தொழில் செய்ய யாரும் முன் வராததால் இவர்களுக்கு போட்டியும் இருப்பதில்லை,இருந்தாலும் நிலைத்திருப்பதில்லை.
வேலையின்றித் தவிக்கும் இளைஞர்களே ,சுய தொழிலில் புரிய முன் வாருங்கள் .எந்தத் தொழிலிலும் நேர்மையாகச் செய்ய ஆளில்லை .நேர்மையை முதல் மூலதனமாகக் கொண்டு உங்களுக்கு விருப்பமான தொழிலில் இறங்கினால் உங்களுக்கு நிச்சியம் போட்டி இருக்காது ,ஆனால் அச்சுறுத்தல் இருக்கும். போட்டிகளைச் சமாளிப்பதை விட இந்த அச்சுறுத்தல்களைச் சமாளிப்பது கொஞ்சம் கடினம் என்றாலும் வாடிக்கையாளர்களின் எதிர்பாராத உதவிகள் மூலம் இந்தத் தடைகளை எதிர்கொள்ள முடியும் .இலாபத்தைக் குறைத்துக் கொண்டு தரத்திற்கும் வாடிக்கையாளர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் .அதற்கு உறுதிமொழி கொடுப்பதோடு நடைமுறையில் உறுதிப்படுத்தியும் காட்டிவிட்டால் உங்களுக்கு நிலைத்த வாழ்வாதாரம் கிடைத்துவிடும் .கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு இன்னும் அலைவது தேவைதானா?

கடைத்தெருவைப் பாருங்கள்.அங்கே குறைந்த இலாபத்துடன் தரமான பொருட்களைக் கொடுக்கும் கடைகளே நிலைத்திருக்கின்றன, வியாபாரத்தைப் பெருக்கவும்,நிலைத்திருக்கவும் நேர்மையே சிறந்த வழி .வியாபாரத்தில் ஏமாற்றுவது தந்திரமோ உத்தியோ  இல்லை.அது குற்றம் .குற்றத்தை மறைப்பதும்,மறைப்பதை அனுமதிப்பதும் அதன் வளர்ச்சிக்கு அனுகூலமாய் இருக்கிறது என்பதற்காக அதைப் பின்பற்றுவது நாட்டின் .வளர்ச்சியைப் பாதிக்கும்.  

No comments:

Post a Comment