Thursday, June 6, 2013

Mind without fear

Mind without fear
தற்கொலைக்கு இருக்கும் பல அடிப்படைக் காரணங்களுள் ஒன்று வறுமை.வறுமையால் வரும் தற்கொலைகள் பொதுவாக தனி தற்கொலையாக இருப்பதில்லை.வறுமையின் கொடுமையைத் தாளாமல் பலர் தான் மட்டுமில்லாது தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றார்கள். வாழ்வாதாரமின்றி நிலையான வருமானமில்லாமல்,பிள்ளைகளை அதிகம் பெற்றுக்கொண்டவர்களே உறவினர் உதவிகளின்றி இறுதியில் இம்முடிவுக்குத் துணிகின்றார்கள்.
பசியோடு இருக்கும் குழந்தைகளின் ஓயாத அழுகுரலையும்,எலும்பும் தோலுமாய் இருக்கும் மனைவியின் புலம்பலையும் கேட்டும் ,ஒட்டி உலர்ந்த வயிற்றைப் பார்த்தும்,இனி இழப்பதற்கு இருப்பில் ஒன்றுமில்லை என்ற நிலைவரை எல்லாவற்றையும் இழந்து ஏதும் செய்வதறியாது,தற்கொலையே தங்கள் குடும்பப் பிணிக்கு மன நிறைவு தரும் மருந்து என்று தற்கொலை முடிவை நாடுகின்றார்கள்.தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டு விடுட்டால் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தன் மனைவியும் பிள்ளைகளும் ஆதரவின்றி மேலும் மோசமாக பரிதவிப்பார்கள் என்று அவர்கள் மீது இரக்கப்பட்டு அவர்களையும் தற்கொலை செய்து கொள்ள கட்டாயப் படுத்துவார்கள் அல்லது கொலை செய்துவிட்டுத் தன் தற்கொலையை மேற்கொள்வார்கள் .பொதுவாகப் பசியோடு இருக்கும்  பிஞ்சுக் குழந்தைகளுக்கு விஷமிட்ட உணவுப் பண்டத்தைக் கொடுப்பார்கள் .சிலர் ஒட்டுமொத்த தற்கொலைக்கு பாழுங் கிணற்றைத் தேர்ந்தெடுப்பர்கள் .சிலர் குழந்தைகளைக் கொன்று விட்டு விட்டில் தூக்குப் போட்டுக் கொள்வார்கள் .
பொதுவாக குடும்ப வறுமை என்பது குடும்பத் தலைவர் தன் சம்பாதிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல்,தன் தகுதிக்கு மீறிய அளவில் குழந்தைகளைக் பெற்றுகொண்டதால் ருதாகும்.வறுமையால் தற்கொலை என்பது நாட்டின்  அவமானம்.மக்கள் தொகை மிகுந்த நாட்டில் அரசும்,அதிகாரிகளும்,சமுதாயமும்  இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.அதனால் பல தற்கொலைகள் பதிவு செய்யப்படாமலேயே விட்டுவிடப்படுகின்றன.வேலை வாய்ப்பு இல்லாமையும்,சம்பாத்தியம் போதுமானதாக இல்லாததாலும் அதை அதிகரிக்க வழி தெரியாததாலும் கவலைப் படுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்க பொதுமக்களும் இதை  ஒரு சமுதாய இழுக்காகக் கருதுவதில்லை.
வறுமையை ஒழிக்க வேலை வாய்ப்புக்களைப் பெருக்க வேண்டும்.இதில் அரசும் தனியாரும் இணைந்து செயல்படவேண்டும்.சுயதொழிலை ஊக்குவிக்கவேண்டும் .மக்கள் தொகை மிகுந்த நாட்டில் வேலை வாய்ப்புக்கள் கூடுதலாகவே இருக்கும்.மக்களுக்கு வேலை இல்லை என்று சொல்வது எந்தவொரு எந்தவொரு அரசுக்கும் அழகல்ல.அது அரசின் திறமையின்மையையே காட்டுகின்றது.ஓர் அமைப்பின் மூலம் சுய தொழில் முனைவோர்களுக்கு போதிய வழிகாட்டலும் ,நிதியுதவியும் ,தொழில் உதவியும் வழங்கவேண்டும்.இப்படி உண்மையாக நினைக்கும் போது வேலைவாய்ப்புகளும் தானாக உருவாகின்றன.வரியை வசூலித்து ,வசூலித்ததையெல்லாம் செலவழித்து முடிப்பதோடு அரசின்  கடமை முற்றுப்பெறுவதில்லை.எதெற்கெல்லாம் செலவழிக்க வேண்டும், எதெற்கெல்லாம் செலவழிக்கக் கூடாது,எவ்வளவு செலவழிக்கலாம்,எவ்வளவு செலவழிக்கக் கூடாது என்பதையெல்லாம் திட்டமிட்டு மக்கள் நலனே நாட்டின் நலன் என்று செயல்படவேண்டும்.ப்போது வேலைவாய்ப்புகள் எளிதாதால் வறுமையும் இல்லை வறுமையால் வரும் தற்கொலைகளும் இல்லை.


No comments:

Post a Comment