Friday, June 28, 2013

Eluthaatha Kaditham

ஒரு ஆய்வாளர் திருட்டு விசிடி யிலிருந்து விடுவிப்புச் செய்ய 50.000 ரூபாய் லஞ்சம் கேட்டார் .ஒரு வட்டாச்சியர் வாரிசு சான்றிதழ் கொடுக்க 5000 லஞ்சம் கேட்டார் ,ஒரு பெண் போலீஸ் அதிகாரி லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டார் .மின்னிணைப்புக் கொடுக்க மின் பொறியாளர் 25000 லஞ்சம் வாங்கும் போது அகப்பட்டுக் கொண்டார்.

இங்கே சொன்ன செய்திகள் கடுகளவு ,சொல்லாமல் விட்ட செய்திகளோ கடலளவு.இது போன்ற செய்திகள் தொலைக்காட்சியிலும்,நாளேடுகளிலும் வராத  நாட் கள் இல்லை.இதன் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிந்துக் கொண்டே வருவதைப் பார்க்கும் போது சட்ட நடவடிக்கைகள் முழுமையாக இல்லை என்பது ஒரு புறமிருக்க குற்றம் புரிபவர்களும் அதையொரு குற்றம் என்று மனதிற்குள் நினைப்பதில்லை,அது கேவலம் என்றோ உலகிற்குத் தெரிந்தால் அவமானம் என்றோ நினைப்பதில்லை.அரசுப் பணியில் சேர்ந்த பின்பு ,விரும்பிச் சேர்ந்த பணியில் பணிக்காகப் பணியைச் செய்வதில்லை கூடுதல் வசதிக்கும்,தெரியாத எதிர்காலத் தேவைக்கென பொருளைச் சேமிக்கவும் பணியையே ஒரு வாழ்வாதாரமாகக் கொண்டுவிடுகின்றார்கள்.

நேர்மையான பணியாளர்களை எங்கும் காணமுடியவில்லை.எதிர்காலத்தில் நல்ல மாற்றம் வரும் என்பதற்கும் நம்பிக்கையுமில்லை .ஏனெனில் பணியாளர்களைத் தேர்வு செய்வோரும்,ஆள்வோரும் நேர்மையாக இல்லை.துவும் சட்டியில் இருந்தால்த்தானே அகப்பையில் வரும் .
அரசியல்வாதிகள் தங்கள் நேர்மையை விளம்பரப்படுத்திக் கொள்கின்றார்கள் .ஆனால் நேர்மை விளம்பரம் மூலம் தீர்மானிக்கப் படுவதில்லை.நேர்மை ஒரு கொள்கை .நாளுக்கு நாள் அது மாறுவதில்லை.


எல்லோரும் இலஞ்சம் கொடுக்க எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் வாங்குவதற்கில்லை .அதனால் தான் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றார்கள். நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களை ஆளும் அரசியல்வாதிகள் தான் தீர்மானிக்க வேண்டும். இது முறையாகவும் முழுமையாகவும் திட்டமிடப்படாவிட்டால் இந்தியர்களின் எதிர்காலம் இன்னும் கடுமையாகத்தான் இருக்கும். காலங்கடந்து வெட்கப்படுவதோ ,வேதனைப்படுவதோ எந்தப்பலனும் கிடைக்கப்போவதில்லை .

No comments:

Post a Comment