Wednesday, June 26, 2013

Kavithai

ஒற்றுமையில் வேற்றுமை வேண்டாமே 

நிலம் பல துண்டுகளாகி நாடாயிருக்கலாம் 
ஆனால் உலகம் என்றைக்கும் ஒன்றுதான் 
நிறம் வெவ்வேறாய் மனிதர்கள் பிரிந்திருக்கலாம் 
ஆனால் இரத்தம் எல்லோருக்கும் சிவப்புத்தான் 
இசைக்கும் சுரங்கள் எவ்வளவோயிருக்கலாம் 
ஆனால்இசைக்கும்  இசைக்கருவி ஒன்றுதான்

எழுதும் எழுத்துக்கள் பலவாக இருக்கலாம் 
ஆனால் எழுதும் எழுதுகோல் ஒன்றுதான் 
எஃகால் ஆன பொருட்கள் விதவிதமாய் இருக்கலாம் 
ஆனால் அவற்றின் மூலப்பொருள் ஒன்றுதான் 
மூச்சுவிடும் மனிதர்கள் வேவேறாய் இருக்கலாம் 
ஆனால் சுவாசிக்கும் காற்று ஒன்றுதான் 

தாய்க்குப் பிள்ளைகள் பலர் இருக்கலாம் 
ஆனால் பிள்ளைக்குத் தாய் ஒன்றுதான் 
பூக்கும் பூக்கள் பலவிதமாய் இருக்கலாம் 
ஆனால் அவை சுரக்கும் தேன் ஒன்றுதான் 
உடலில் உறுப்புகள் பல இருக்கலாம் 
ஆனால் அனைத்தையும் இயக்கும் மூளை ஒன்றுதான் 

மதம் வெவ்வேறாய் இருந்தாலென்ன
வாழும் நெறி வாழ்வோருக்கு ஒன்றுதானே 
மொழி வெவ்வேறாய் இருந்தாலென்ன 
புரிதலும் புரிந்துகொள்ளுதலும் ஒன்றுதானே 
இனம் வெவ்வேறாய் இருந்தாலென்ன 
பிறத்தலும்  இறத்தலும் ஒன்றுதானே 

கோயில்கள் வெவ்வேறாய் இருந்தாலென்ன 
வேண்டும் அமைதி அனைவருக்கும் ஒன்றுதானே 
செயற்கையால் வேறுபாடுகளை விரித்துக் கொண்டே
செல்லும் மனிதனே 
இயற்கையைப் பார்த்து

இன்னுமா நீ திருந்த நினைக்கவில்லை 

No comments:

Post a Comment