Monday, June 10, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 
இந்தியர்களைப் பிற நாட்டினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அகக் கூறுகளுள் ஒன்று இந்தியர்களின் கடவுள் நம்பிக்கை .
கல்வியறிவு அதிகமில்லாத,அறிவியல் முன்னேற்றமில்லாத,நாகரிக வளர்ச்சியில் உந்தித் தள்ளப்படாத கிராமிய மக்களிடையே இந்த நம்பிக்கை சிறிதும் மாற்றமின்றி காலங்காலமாய் அப்படியே இருந்துவருகிறது.மக்களின் இரக்கம் ,நம்பிக்கை போன்றவற்றைச் சுரண்டிக் கொள்வதில் சமுதாயம் ஒரு பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது .
கோயில் உண்டியலில் பணத்தைக் கொட்டும் மக்கள் ,ஏதுமில்லாத வறியவர்களுக்குக் கொடுக்கத் தயக்கம் காட்டுவார்கள்.சில சமயங்களில் பேச்சு முற்றி கடுஞ் சொற்களில்போய் முடியும் .ஏன் இப்படி ? உதவி கேட்கும் ஒருவன் உண்மையிலேயே பொருள் இல்லாதவன் என்பதை உடனடியாக அறிந்து கொள்ளமுடியாததால் 
சிலைக்குக் காட்டும் இரக்கம் மனிதர்களுக்கு இல்லாமலிருக்கலாம் .ஆனால் இதன் பின்னணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல காரணங்கள் இருக்கின்றன.யாருக்கும் தெரியாமல் திரை மறைவில் செய்த குற்றத்தாலும்,மோசடிகளாலும்,தவறுகளாலும் பெற்ற அளவில்லாத பயனுக்கு மனம் கொடுக்கத் தூண்டும் ஒரு பிராயச்சித்தமாகவும் இருக்கலாம்.அதனால் அதே குற்றங்களைத் தொடர்ந்து செய்ய கடவுளின் அருள் இருப்பதாக மனிதர்கள் நம்பிக்கை கொள்ளலாம்.தன் தகுதிக்கு மீறிய ஒரு விருப்பத்தை நிறைவேற்ற கடவுளுக்குக் கொடுக்கும் ஒரு வெகுமதியாகவும் இருக்கலாம்.

கோயில் நிர்வாகம் நிதி வரவுகளை நேர்மையாகச் செலவு செய்கிறதா என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது .அதனால் இருப்போர் அளித்த பொருள் வறியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை கோயிலை நிர்வகிப்பதற்கு அப்பொழுதே அதற்குத் தேவையானால் பொருளையும் நில புலன்களையும் எழுதிவைத்துவிட்டுத்தான் போயிருக்கின்றார்கள் .உண்டியல் வருமானத்தால் இல்லை .
கோயில் நிர்வாகத்திற்கு நிதி உதவி செய்யவிரும்புவோர் அலுவலகத்தில் தொகையைச் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும் .
 கோயில்களில் உண்டியல் அவசியமில்லை .உண்டியல் இன்றைக்கு உண்மையான ஆன்மிகத்திற்கு முரண்பாடாக உள்ளது .கொடுக்க விரும்புவோர் அர்ச்சனைப் பொருட்களாகவும் பூமாலைகளாகவும் , அன்னதானத்திற்கு அரிசி பருப்பு போன்ற பொருட்களாகவும் வழங்கலாம் 
உண்டியல் கோயில் நிர்வாகத்திற்குக் கிடைத்த அட்சய பாத்திரம் போலாகிவருகிறது 

இல்லாதவன் மட்டுமில்லை இருக்கின்றவனும் இன்றைக்குக் கேட்கிறான் .இரந்து வாழ்தல் இழிநிலை ,சமுதாயத்தின் அவலநிலை.இரப்போர் இருக்கும் வரை நாடு வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடை போடமுடியாது இரப்போர் இருப்போராக அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் .இதைக் கறுப்புப் பணத்தை விழுங்கும் கோயில் உண்டியல்கள் செய்யுமா ?

No comments:

Post a Comment