Saturday, June 1, 2013

Cartoon

கார்ட்டூன் 





முன்பெல்லாம் திருட்டுக்கள் நடுநிசி நேரத்தில் பாதுகாப்புக் குறைவாக உள்ள இடங்களில் யாருக்கும் தெரியாமல் நடைபெறும்.திருடர்கள் லுங்கி, தடித்த பெல்ட்,முரட்டு மீசை,முகமூடி,கழுத்தில கர்சீப் போன்ற அடையாளங்களுடன் இருந்தார்கள்.இப்போது திருடர்கள் பெரிய செல்வந்தர்ககள் போல நாகரிக உடையணிந்து கொஞ்சங்கூட வித்தியாசம் தெரியாமல் நடமாடுகின்றார்கள்.முன்பு திருடர்கள் கல்வியறிவு இல்லாமல் இருந்தார்கள் ,இப்போது கற்றவர்களும் கூட கற்ற கல்வியின் மீது நம்பிக்கையில்லாமல் திருடர்களாகி வருகின்றார்கள் .அறிவியல் வளர்ச்சியை மிக அதிகமாக பயன்படுத்திக் கொள்பவர்கள் இவர்களாகத்தான் இருக்கின்றார்கள். ATM மிஷினையே தூக்கிக் கொண்டு போகின்றார்கள் .அரசை விட மிக அற்புதமாக ருபாய் நோட்டுக்களை அச்சடிக்கின்றார்கள்.அரசு நிறுவனங்களை கொள்ளையடிக்கின்றார்கள்.காற்றாலை பொருட்கள்,மின் கம்பிகள்,ரயில்வே கிடங்குகள்,ரேஷன் கடைகள்,ஆற்று மணல்,காட்டு மரங்கள்,என எல்லாவற்றையும் கண்காணிப்பு மற்றும் செக்கூரிட்டி கண்முன்னே கடத்திக் கொண்டு போய் விடுகின்றார்கள்.நகைக் கடைகளையும்,அடகுக் கடைகளையும் ஒரே இரவில் காணாமற் போய்விடும் அளவிற்கு கொள்ளையை மிக நேர்த்தியாக செய்யும் திறமையை வளர்த்துள்ளார்கள்.விளையாட்டுத் துறையில் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது.இந்தியாவில் மற்ற எல்லாத் துறைகளையும் விட திருட்டே செழிப்பாக வளர்ச்சி பெற்று வருகிறது என்பது கசப்பான உண்மை . நூதனத் திருட்டுகள் 90 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.இந்தியாவில் வேறு எந்தத் துறையிலும் இந்த அளவு எல்லையைத் தொட்டதில்லை .இதற்குக் காரணம் அரசின் தீவிரக் கண்காணிப்பும் ,அதிகாரிகள் தங்கள் வேலைகளில் கொண்டுள்ள நேர்மையும் தான்.அரசு எடுத்துக் கொண்ட கடுமையான எதிர் நடவடிக்கைகளால் திருட்டு 100 சதவீதத்தை எட்டுவது தடுக்கப்பட்டது.இந்த உலக சாதனையை நனவாக்கிய காவல் துறை உயர் அதிகாரிகள் 500 பேருக்கு இவ்வாண்டு சுதந்திர தின விழாவின் போது பதக்கம் வழங்கப்படும் என்று நம்பப்படுகின்றது என்று செய்தி வந்தாலும் வரலாம்.

No comments:

Post a Comment