Tuesday, June 4, 2013

Creative Thoughts

Creative thoughts

அறியாதவர்கள் அறியாதவர்களாகவே இருக்கும் வரை அறிந்தவர்கள் அறியாதவர்களை ஏமாற்றி ஆதாயமடை யமுடியும் என்பதால் அறிந்தவர்கள் அறியாதவர்களை அறியாதவர்களாக இருப்பதையே உள்ளூர விரும்புகின்றார்கள் .அறியாதவர்கள் அறிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால் நெடுங்காலம் ஆனாலும் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை

மனதில் தங்கும் சுமைகளே வாழ்க்கைப் பயணத்திற்கு ஒரு பாரமாக அமைந்து விடுகின்றது .குறைந்த சுமை நிறைவான பயணம் என்பது வாழ்கைப் பயணத்திற்கும் பொருந்தும் .கடந்த கால அனுபவத்தின் துணையோடும் எதிர் காலத்தைப் பற்றிய சிந்தனைகளோடும் நிகழ் காலத்தை கொண்டு செலுத்துவது இனிய எளிய வாழ்கையின் இரகசியமாகும் .

கண்டிக்கத் தெரியாதவனுக்கு கருணை காட்டவும் தெரியாது 
கற்றுக் கொள்ள விரும்பாதவனுக்கு கற்றுக் கொடுக்கத் தெரியாது
ஊர் பேர் அறியாதவனுக்கு செல்லும் வழி தெரியாது 

எந்தவொரு காரியத்தையும் சரியாகவும் ,குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள்ளும்  செய்து முடிக்கவேண்டும் என்று நினைத்தால் அதை நீயே செய்வதுதான் சிறந்த வழி .எந்தவொரு மாற்று வழியும் ஏதாவதொரு வகையில் ஓர் இழப்பைத் தராமல் இருப்பதில்லை .

உழைப்புத்தான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது.நேர்மையான உழைப்பு என்பது பொற்காசு போன்றது .நேர்மையற்ற உழைப்பு என்பது செல்லாக் காசு போன்றது. பொற்காசும் வேண்டாம்,செல்லாக் காசும் வேண்டாம்.அரசு அச்சடிக்கும் நோட்டாக இருந்தால் போதும் என்று சமுதாய மக்கள் எப்போதும் ஒரு சராசரி நிலையிலேயே திருப்தி அடைந்துவிடுகின்றார்கள்.
வாழ்கையில் ஒரு மனிதனின் முதல் இருபது ஆண்டுகள் (பிள்ளைப் பருவம்) அடுத்த இருபது ஆண்டுகளைத் (இளமைப் பருவம்) தீர்மானிக்கின்றது. ந்த இருபதாண்டுகள் அடுத்து வரும் இருபதாண்டுகளைத் (வளமைப் பருவம்) தீர்மானிக்கின்றது.எஞ்சிய காலத்தை (முதுமைப் பருவம்) தீர்மானிப்பது நீ சமுதாயத்தில் எப்படி நடந்துகொண்டாய், உன் பிள்ளைகளை எப்படிக் கவனித்துக் கொண்டாய் என்பதைப் பொறுத்தது.

மனத் தூய்மையே நேர்மை,மற்றவையெல்லாம் வெறுங்கூச்சல்.நேர்மை அரிதாகி வருகிறது என்றால் மனிதர்களிடம் மனத் தூய்மை காணாமற் போகிறது என்று அர்த்தம் .


அறிவுப் பூர்வமான சிந்தனையில் மூத்தவனாய் இருக்கவும்,ஆக்கப் பூர்வமான செயலில் இளைஞனாய் இருக்கவும் வேண்டும். 

No comments:

Post a Comment