Thursday, July 18, 2013

Arika Iyarpiyal

அறிக அறிவியல் 
ஓர் ஊசலின் அலைவு நேரம் அதன் நீளத்தைப் பொருத்து மாறுபடுகின்றது .ஊசல் குண்டின் நிறை மற்றும் உருவத்தைப் பொருத்து மாறுபடுவதில்லை .இந்த உண்மையை முதன் முதலில் கலிலியோ என்ற விஞ்ஞானி தேவாலயத்தில் காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த லாந்தர் விளக்கினால் கண்டுபிடித்து அறிவித்தார் .இன்றைக்கு இந்த கண்டுபிடிப்பு ஊசல் கடிகாரங்களை இயக்க பயனுள்ளதாக இருக்கிறது .
உலோகத்தாலான ஊசல் குண்டு q  கூலும் நேர் மின்னேற்றம் ஏற்றப்படுகின்றது .இது 'd ' என்ற இடைவெளியுடன் கூடிய இரு இணைத் தகடு களுக்கு இடையில் வைக்கப்பட்டு அலைவுறு மாறு செய்ய அதன் அலைவு நேரம் T ஆக இருக்கிறது..இப்பொழுது இணைத் தகடுகளுக்கு இடையே V  என்ற மின்னழுத்த வேறுபாடு செயல்படுமாறு தூண்டப்பட்டால் ஊசலின் அலைவு நேரம் எவ்வளவாக இருக்கும் ?
புவி ஈர்ப்பு விசையினால் மட்டும் அலைவுறும் போது , ஊசலின் அலைவு நேரம் T = 2π[L/g]1/2  இதில் L ஊசலின் நீளமாகும்.
மின் புலத்தால் குண்டின் மீது செயல்படும் விசை =qxE  
நியூட்டனின் இயக்க விதிகளின் படி இது ma க்குச் சமம் என்பதால் குண்டின் மீது செயல்படும் கூடுதல் முடுக்கம்a= qE/m . இதில் m குண்டின் நிறை இந்த முடுக்கம் ஈப்புக்கு இணையாகச் செயல்பட்டால் T’ = 2π[L/(g+qE/m]1/2

ஈர்ப்புக்கு எதிராகச் செயல்பட்டால்  T” = 2π[L/(g-qE/m]1/2 இங்கு E = V/d.

No comments:

Post a Comment