Thursday, July 25, 2013

Micro aspects of developing inherent potentials

Micro aspects of developing inherent potential

எப்போதும் இணைந்து செயலாற்றுவது எல்லோருக்கும் மிகுந்த பயனைத் தரும் .ஆனால் நம்மில் பெரும்பாலானோர் பிறருடன் இணைந்து செயலாற்ற மனப் பூர்வமாக விரும்புவதில்லை .தான் எப்போதும் பிறரை விட ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்று நினைப்பதால் ,தனக்குத் தெரிந்ததை பிறருக்குச் சொல்லி முன்னேற விடுவதில்லை .அதனால் கிடைக்கும் பயனில் பெரும் பங்கை தானே எடுத்துக் கொள்ளவேண்டும் என்று செயல்படுவதால் பிறரை ஒதுக்கிவிடுகின்றார்கள் .இப்படிப்பட்ட தவறான எண்ணங்களை மனதில் குடிகொள்ள அனுமதிப்பதால் யாரும் இணைந்து செயலாற்ற முன் வருவதில்லை .ஆனால் இயற்கையில் எங்கெங்கு நோக்கினும் இணைந்து செயலாற்றும் போக்கே சாகாத சமுதாயத்திற்கு பயனுள்ளது என்ற கருத்து விளம்பரப் படுத்தப் பட்டு காணப்படுகின்றது .நாம் படித்த பாடங்களும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றன .

கணிதப் பாடத்தில் ஓர் எண்ணோடு மற்றோர் எண்ணைக் கூட்ட அதன் மதிப்பு எப்போதும் கூட்டப் படும் எண்களை விடக் கூடுதலாகவே இருக்கும் .தனி எண்களின் மதிப்பை விட கூட்டுத் தொகையின் மதிப்பு அதிகம் 
இக்கணக்குப் பாடம் தனி மனிதர்களின் முயற்ச்சியை விட கூட்டு முயற்சி அதிகப் பயனுறு திறம் மிக்கது என்ற கருத்தைக் கூறுவது போல இருக்கிறது ஊர் கூடி இழுத்தால் தான் தேர் ஓடும் 

விலங்கியல் பாடமும் இக்கருத்தைச் சொல்லாமற் சொல்கிறது.நம் உடம்பு நலமாக இருந்து கொண்டு திடமாக வேலை செய்கிறது  ,உடம்பின் உறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து செயலாற்றுவதால். இவற்றுள் ஒரு உறுப்பு பழுதுற்றாலும்  உடலின் செயல்திறன் வெகுவாகக் குன்றிப் போகும்

தாவரவியலில் இந்த உண்மையை ஒவ்வொரு தாவரமும் தொலைக் காட்சி போல இயல் காட்சியாகக் காட்டுகின்றது . நிலத்திற்கு கீழ் மரத்தின் வேரும்  நிலத்திற்கு மேல் உள்ள இலைகளும் ஒற்றுமையைச் செயல்பட்டால் தான் மரத்தின் வளர்ச்சியும் விளைச்சலும் .

வேதியியலில் மூலக்கூறுகள் எல்லாம் அணுக்களாலான ஒரு கூட்டணி தான்.இக் கூட்டணி முறிந்தால் மூலக்கூறு தன் தனித் தன்மையை இழந்து விடும்.அணுக்கள் எல்லாம் அடிப்படைத் துகள்களின் கூட்டமைப்புதான் .இந்த அடிப்படைத் துகள்கலெல்லாம் இணைந்து செயலாற்றி னால்தான் அணு அணுவாக இருக்க முடியும் .

கணினியியலில் ,கணினி செயல்பட அதிலுள்ள சிலிகான் சில்லுகள் ஒருங்கிணைத்து செயலாற்றவேண்டும் .டையோடு ,ட்ரை யோடு எல்லாம் நேர் மற்றும் எதிர் வகைக் குறைகடத்திகள் இணைந்து செயல் புரிவதால்தான் பல சிறப்புத் தன்மைகளைப் பெறுகின்றன .


இயற்பியலும் இக் கருத்தை வலியுறுத்த தவறவில்லை .எளிதாக  ஒடிக்க முடிந்த குச்சியில் பலவற்றை ஒன்றிணைத்துக் கட்ட அதை ஒடிக்க முடிவதில்லை.வலுவிழந்த குச்சியே யானாலும் பல குச்சிகளை இணைத்துக் கொண்டால் அதன் வலிமை பல மடங்கு அதிகமாகும்.அலைகள் மேற்பொருந்தினால் அதன் செறிவு அதிகரிக்கும் .என்ற உண்மை கூட இதே கருத்தை எடுத்தியம்புகிறது.இன்றைக்கு நம் நாடு வளர்ச்சி இன்றி பின்தங்கி இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நாம் ஒருங்கிணைந்து செயல்படாதிருப்பதை விட வேறு எதுவாக இருக்க முடியும் .

No comments:

Post a Comment