Sunday, July 21, 2013

Vinveliyil Ulaa

ஒப்ஹியூச்சியின் இரட்டை விண்மீன்கள்
இவ் வட்டாரத்தில் ஒரு சில இரட்டை விண்மீன்கள் உள்ளன.20 ஒளி ஆண்டுகள் தொலைவில் றக்குறைய ஒத்த வடிவத்துடன் தோற்ற ஒளிப் பொலிவெண் 5 உடன்  ஆரஞ்சு நிமுடைய இரு குறு விண்மீன்களாலான இரட்டை விண்மீனாகும். இதன் சுற்றுக் காலம் 500 ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர்.70 ஒப்ஹியூச்சியும் ஓர் இரட்டை விண்மீன்.17 ஒளி ஆண்டுகள் தொலைவில் 88 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் தோற்ற ஒளிப் பொலிவெண் 4.2, 6.1 உடைய ஞ்ள் மற்றும் ஆரஞ்சு நிமுடைய சூரினைவிட நிறை தாழ்ந்த இருவிண்மீன்கள் இதிலுள்ளன. பூமியிலிருந்து நோக்கும் போது இவையிரண்டும் மெதுவாக விலகிச் செல்வது போலத் தோன்றுகின்றன.தற்பொழுது இவை 4.6 வினாடிகள் கோண விலக்கத்துடன் தெரிகின்றன .
பெர்னார்டு விண்மீன்
இவ்வட்டாரத்தில் பிராக்சிமா மற்றும் ஆல்பா சென்டாரிக்கு அடுத்து நமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான பெர்னார்டு விண்மீன் இவ்வட்டாரத்தில் உள்ளது .1857-1923 ல் வாழ்ந்த பெர்னார்டு எட்வர்ட் எமர்சென் என்ற வானவியலார் இதைக் கண்டுபிடித்ததால் அவர் பெயராலேயே இவ்விண்மீன் அழைக்கப் படுகின்றது.வியாழனின் துணைக் கோளானான அமெல் தியாவைக் கண்டுபிடித்தவர் இவரேயாவர் .9 வயதில் போட்டோ படம் எடுக்கும் நிலையமொன்றில் பணியாற்றியவர்.இரவில் பொழுதுபோக்காக விண்மீன்களைப் பின்தொடர்ந்தார்.30 வயதிற்குள் 10 வால்மீன்களைக் கண்டுபிடித்தார்.ஒவ்வொரு முறையும் 200 டாலர் அன்பளிப்பு பெற்றார் .இதுவே அவருக்கு வானவியலில் ஈடுபாடு கொள்ளத் தூண்டியது .
பெர்னார்டு விண்மீன் சிவப்பு நிறக் குறு விண்மீனாக ஒப்ஹியூச்சி வட்டாரத்தின் வடக் கெல்லையில் உள்ளது .இவ் விண்மீன் பிற விண்மீன்களைக் காட்டிலும் உயரளவு தனித்த தன்னியக்கத்தைப் பெற்றுள்ளது.ஓராண்டில் 10.4 வினாடிகள் கோண விலக்கம் பெறுமாறு, அதாவது 180 ஆண்டுகள் முழு நிலவின் விட்டத்திற்குச் சமமான தோற்றத் தொலைவை கடக்குமாறு இடம் பெயர்கின்றது .இதன் நிறமாலையில் காணப்படும் பெயர்ச்சி இவ்விண்மீன் 108 கிமீ /வி என்ற உயர் வேகத்தில் நம்மை நோக்கி வருவதாகத் தெரிகின்றது.அதனால் ஒரு நூற்றாண்டு காலத்தில் இதன் தொலைவு 0.036 ஒளி ஆண்டுகள் குறைகின்றது .11000 ஆண்டில் இது மிக நெருக்கமாக 3.85 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர் .இது ஏற்கனவே 10 பில்லியன் ஆண்டுகள் வயதானதாக இருந்தாலும் இன்னும் 40 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும் என்றும் அதன் பின்னரே இது குளிர்ந்து கருந்துளை குறு விண்மீனாக உருமாறும் என்றும் கூறுகின்றார்கள்.தற்பொழுது 5.9 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் ஒளிர்திறன் சூரியனின் ஒளிர் திறனில் 2000 ல் ஒரு பங்கு என்றும்,ஆரம் 0.2 மடங்கு என்றும்,நிறை 0.2 மடங்கு என்றும் அறிந்துள்ளனர்.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 9.54 ஆக உள்ளது.
இவ்வட்டாரத்தில் 4000 ஒளி ஆண்டுகள் தொலைவில் 9000 வானியல் அலகு குறுக்கில் NGC 6572 என்று பதிவு செய்யப்பட்ட கோளக நெபுலா தோற்ற ஒளிப்பொலிவெண் 9 உடன் நீள் வட்ட வடிவில் 

உள்ளது .இது 70 ஒப்ஹியூச்சிக்கு வடக்காக அமைந்துள்ளது . 20 விண்மீன் களுடனும் தோற்ற ஒளிப் பொலி வெண் 4.2 உடனும் IC 4665 மற்றும் 60 விண்மீன் களுடனும்,தோற்ற ஒளிப் பொலி வெண் 4.6 உடனும் NGC 6633 என்று பதிவு செய்யப்பட்ட தனிக் கொத்து விண்மீன்கள் இவ்வட்டாரத்தில் உள்ளன.மேலும் இவ்வட்டாரத்தில் எண்ணிறைந்த கோளக் கொத்து விண்மீன் கூட்டங்கள் காணப்படுகின்றன.அவற்றுள் சில M 9(NGC 6333),M 10 (NGC 6254),M 12 (NGC 6218), M 14 (NGC 6402),M 19 (NGC 6273),M.62 (NGC 6266),M 107 (NGC 6171)  போன்றவைகளாகும் .இதில் M .14 குறைந்த செறிவுடன் கூடிய மையமும்,சிறிய அளவில் நீள்வட்ட வடிவமும் கொண்டுள்ளது .M.19 ,27000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சற்று நீட்சியுற்று நீள் கோள வடிவிலும் M .62 மிகவும் ஒழுங்கற்ற வடிவிலும் இருக்க M .107 ல் கருநிழல் வடிவப் பகுதிகள் உள்ளன .M 10 ம் M 12 ம் இவ்வட்டாரத்தின் மையத்தில் பேரண்ட நடு வரைக் கோட்டுக்கு ஓரளவு கீழே அமைத்துள்ளன.இவை முறையே 19,16 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.இவையிரண்டும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் விண்மீன்களைக் கொண்டிருந்தாலும் M 12 சற்று கூடுதலாக வெப்ப மிக்க விண்மீன்களைக் கொண்டுள்ளது . M 62 ம் M.19 ம் இவ்வட்டாரத்தின் தெற்கத்திய எல்லையில் சற்றேறக் குறைய சம தொலைவில் இரட்டை விண்மீன் போல இரட்டை அண்டங்களாக 23 ஆயிரம் ஒளி ஆண்டுகள் உள்ளன .M .19 ல் கூடுதலான விண்மீன்களும் M.62 ல் ஒரு சில குளிர்ந்த விண்மீன்களும் உள்ளன .    

No comments:

Post a Comment