Tuesday, July 2, 2013

Mind without fear

Mind without fear
முடிவில்லாதது,நிரந்தரமானது என்று இப்பிரபஞ்சத்தில் எதுவுமேயில்லை.எல்லாம் அழியப் போகின்றன என்று சொன்னாலும் உண்மையில் ஒரு மாற்றம் பெறுவதற்கான முடிவை நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றன.அதனால் மாற்றம் ஒன்றுதான் மாற்றமின்றி இப்பிரபஞ்சத்தில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றது என்று அறிஞர்கள் கூறுவார்கள்.இயற்கையில் எதுவுமே நிலையானதில்லை என்றால் அது இறுதி முடிவு என வர்ணிக்கப்படும் பேரழிவுக்கும் கூடப் பொருந்தலாம்.பெரு வெடிப்புக்கு(Big bang) முன்னே இந்தப் பிரபஞ்சம் எப்படியிருந்தது என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லையோ,அது போல பேரழிவிற்குப் பின்பும் என்ன நிகழும் என்பதை இயற்கையைத் தவிர வேறு யாராலும் உறுதிபடக் கூறமுடியாதிருக்கின்றது .

பேரழிவிற்கு முன் பிரபஞ்சம் எப்படி இருந்ததோ அப்படியே பேரழிவிற்குப் பின்பும் இருக்கும் எனலாம்.ஏனெனில் சார்பிலாக் காலமும் வெளியும் நிலையானது.அனந்தம் என்பது எண்களுக்குமட்டும்தான் .இயற்பியல் உலகில் அப்படி எதுவுமில்லை என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.இயற்கையில் காணப்படும் விதி விலக்குகள் நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துகின்றன.காலத்திற்கு முடிவில்லை.உலகம் அழியலாம்,ஒரு விண்மீன் அழியலாம்,அண்டம் அழியலாம்,பேரண்டமே அழியலாம்.பொருளேதும் பிரபஞ்சத்தில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் காலம் இருந்து கொண்டுதானிருக்கும்.இயற்கையில் நம்பமுடியாதவைகள் பல இருக்கலாம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.பரந்த பிரபஞ்சத்தின் வெளிகூட எல்லையற்றுயிருக்கலாம்.பிரபஞ்சத்தில் ஒரேயொரு விண்ணுருப்பு மட்டும் இயங்கிக்கொண்டிருந்தால் அது எத்தகைய இயற்பியல் வெளியில் சுற்றித் திரியும்.அது எல்லைக்குட்பட்ட வெளியில் இயங்குகின்றது என்றால் அந்த எல்லையை வரையறுப்பது எது? எல்லை யென்றால் எல்லைக்கு அப்பால் என்ன என்பதும் ,ஒன்றுமில்லையென்றால் எல்லையே தேவையில்லை என்பதும் புதிராக இருக்கின்றன.  


பேரழிவிற்குப் பின்பும் பிரபஞ்சத்திற்கு வாழ்க்கை இருக்கும்போது நாம் ஏன் இடையிடையே வரும் தோல்விகளால் இனி வாழ்கையே யில்லை என்று பயப்படவேண்டும் 

No comments:

Post a Comment