Thursday, July 4, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 
தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 520 பொறியியல் கல்லூரிகள் ,காட்டுத் தனமாக பொறியாளர்களை உற்பத்தி செய்து வருகின்றன.B .E பட்டதாரிகள் மட்டுமே நம் தேவைக்கும் அதிகமாக கிடைக்கக் கூடியதாக இருக்கிறது .எல்லாம் பற்றாக்குறையாகி வரும் இக்காலத்தில் பொறியியல் பட்டதாரிகள் மட்டும் அதிகமாகாக் கிடைக்கின்றார்கள்.
  
போலியான பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் இந்திய தொழிற்சாலைகளைப் போல கல்விச் சாலைகளும் மாறி வருவது எஞ்சி வாழும் சில நல்லோர்களை அச்சப்படுத்திவருகிறது .இந்தியாவின் உறுதியான  முன்னேற்றத்திற்கு இக் கல்வி வளர்ச்சி நிரந்தரமாகப் பயன் தரப்போவதில்லை .இதை அரசியல் வாதிகள் எப்போதும் போல உணராவிட்டாலும் கல்விச் சிந்தனையாளர்களும் மௌனமாக இருந்து வருவது நம் பின்னேற்றத்தை உறுதி செய்வ து போலிருக்கின்றது.
இவ்வளவு பொறியியல் கல்லூரிகள் ,அவற்றில் அதிகரிக்கப்பட்ட இடங்கள் இருக்கின்றதே என்பதற்காக ஆண்டுதோறும் 85-90 % +2 மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்கின்றார்கள்.100 க்கு 100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டி நிற்கிறது .மதிப்பெண் வாங்குவதற்காகவே தயார் செய்யப்பட்ட மாணவர்களால் அந்தக் கல்வியின் பயனை அறியமுடிவதில்லை. .எப்படியாவது இருக்கும் இடங்களையெல்லாம் நிரப்பி விடவேண்டும் என்று ஒவ்வொரு கல்லூரியும் கொடுக்கும் விளம்பரங்களும்,சலுகைகளும் கணக்கிலடங்கா.மாணவர்கள் கூட்டம் கூட்டமாய்ச் சேருவதற்கு நம்பிக்கை யூட்டுவதற்காக அளிக்கப்படும் வாக்குறுதிகளால் கல்வியின் தரம் மேம்படுவதில்லை .சிறப்பு வகுப்புகள்,அடிப்படை ஆங்கில மொழிப் பயிற்சி ,அடிப்படை கணக்குப் பாடம்  தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி கொடுக்கப்படுகின்றது. மாணவர்களின் றுகளுக்கு ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் தண்ணை.

B .E  பட்டம் எப்படியாது பெற்றுவிட்டால் அதைக்காட்டி ஏதாவது வேலையில் சேர்ந்துவிடலாம் .என்று மாணவர்கள்  நினைக்கின்றார்கள் .புரிதல் இல்லாத கல்வியால் எந்தப்பயனையும் அவர்கள் கொடுக்கப்போவதில்லை.சுயமாகச் சிந்திக்கப் பயிற்சி அளிக்காத எந்தக் கல்வியும் சமுதாயத்திற்கு நன்மை தருவதில்லை .இதில் வேடிக்கை என்னவென்றால் நம்முடைய கல்வி முறை LKG  யிலிருந்து உயர் படிப்பு வரை , வெறும் மதிப்பெண் ணு க்காகவே இருப்பதாக மாணவர்களும்,பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் .திறமையில்லாவிட்டாலும் இன அடிப்படையில் வேலை என்பது இன்னும் நிலைமையை மோசப்படுத்திவிடுகின்றது .அவர்களால் வேலைகள் மற்றவர்களுக்கு அதிகமாகி விடுகின்றது.

No comments:

Post a Comment