Friday, July 26, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 
இன்றைய இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று கூறுவார்கள் .இது உண்மையானால் நேற்றைய இளைஞர் கள் இன்றையத் தூண்களாக விளங்கி இருக்கவேண்டும் .ஆனால் அவர்களுள் எவ்வளவு பேர் இந்த நாட்டைத் தாங்கிப் பிடிக்கின்றார்கள் .நாட்டின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது நேற்றைய இளைஞர்கள் தவறான பாதையில் வெகு தூரம் கடந்து வந்து விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது .பலர் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மை யற்றவர்களாக இருக்கின்றார்கள் .தனக்கு வேண்டியதை முயன்று சம்பாதிக்க முயலாமல் ,தவறான வழிகளில் பெற உள்ளார்ந்து விரும்புகின்றார்கள் .தினம் தினம் நடக்கும் கொலைகளும் ,கொள்ளைகளும் ,குற்றங்களும் நம்மை அச்சத்தின் விளிம்புக்கே இட்டுச் செல்கின்றன. தொலைக் காட்சி ,செய்தித் தாள்களில் குற்றப் பின்னணி உடைய செய்திகளே அதிகம் வருவதும் அவை அதிகரித்துக் கொண்டே வருவதும் இக் கருத்தை உறுதிப் படுத்துகின்றன .நேற்றைய இளைஞர்களின் நிலைமையே இப்படி வளர்ந்து வந்திருகின்றது என்றால் இன்றைய இளைஞர்களின்

நிலைமை நாளை எப்படி  யிருக்குமோ

No comments:

Post a Comment