Saturday, July 27, 2013

Vethith Thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-வெள்ளீயம் -தொடர்ச்சி 
பயன்கள் 
வெள்ளீயம் தகர டின்களை உருவாக்கப் பயன்படுகின்றது .வெள்ளீயம் ஆக்சிஜன் மட்டுமின்றி நீர் மற்றும் கரிம வகை அமிலங்களினால் பாதிக்கப்படுவதில்லை .மேலும் அவற்றின் உப்புக்கள் மனிதர்களின் உடல் நலனுக்கு எவ்விதத் தீங்கும் இழைப்பதில்லை .இதனால் வெள்ளீய டின்கள் பதப்படுத்தப் பட்ட உணவுப் பண்டங்களுக்கு பாதுகாப்பானது.இப் பயன் காரணமாக இதை தகரக் குவளை உலோகம் (canning metal) என்பர் .
வெள்ளீயப் பூச்சிட்டு எளிதில் அரிக்கப் படுகின்ற உலோகங்களை காப்புச் செய்ய முடிகின்றது .வெள்ளீய முலாம் பூச்சிற்கு டின் சல்பேட் மற்றும் கந்தக அமிலக் கரைசலை மின்னாற் பகு நீர்மமாகக் கொண்டுள்ளனர் .
வெள்ளீயம் தாழ்ந்த உருகு நிலை கொண்ட உலோகம் என்பதால் அதைப் பற்றவைப்பு முறையில் இரு உலோகத் துண்டுகளை பற்றவைக்கப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் .வெள்ளீயம் 16 % பிஸ்மத் 52 % ஈயம் 32 % கலந்த கலப்பு உலோகம் நீரின் கொதி நிலையில் கூட உருகி விடுகின்றது .காலியம் இன்டியத்துடன் கூடிய வெள்ளீய க் கலப்பு உலோகம் இதை விடக் குறைந்த உருகு நிலையைக் கொண்டது .இது மின்னுருக்கி () கம்பியாகப் பயன்படுத்துகின்றார்கள் .,ஈயமும் வெள்ளீயமும் கலந்த கலப்பு உலோகமும் இதற்குப் பயன் தருகின்றது .
சிறப்புப் பயன்பாட் டிற்கென வெள்ளீயம் தந்த கலப்பு உலோகங்கள் பல .இவற்றுள் சில பியூட்டர் (Pewter) வுட் (Wood’s metal) பிரிட்டானியா (britannia),பாப்பிட் (Babbitt),பெல் (Bell) துப்பாக்கி (Gun),டைப் (type), வெண்கலம் (Phosphor Bronze)   போன்றவையாகும் 
மின்னணுவியல் துறையில்(Electronics) படிகச் சில்லுகளை (Chips) உறையிடுவதற்கும்,மின்னிணைப்புக் கம்பியாக உபயோகப் படுத்துவதற்கும் வெள்ளீயம் அனுகூலமாய் இருக்கிறது .தாழ்ந்த வெப்ப நிலைகளில் அவை பழுப்பு வெள்ளீயமாக மாறிவிடாமல் இருக்க வெள்ளீயத்தில் பிஸ்மத் போன்ற சில வேற்றுப் பொருட்களைக் கலக்கின்றார்கள் .
பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்குச் சாயமிடும் வழிமுறையில் வெள்ளீயக் குளோரைடு அரிகாரமாகக் கொள்ளப் படுகின்றது .இயற்கைப் பட்டு மிகவும்  மென் மையானது .அதை இக் கரைசல்களினால் பண்டுவப் படுத்தும் போது உண்டாகும் ஸ்டானிக் ஹைட்ராக்சைடு பட்டு இழைகளில் படிய அது சாயத்தை உறுதியாகப் பற்றிக் கொள்கிறது .
பீங்கான் ,கண்ணாடியாலான பொருட்களுக்குச் சிவப்பு நிறமூட்ட வெள்ளீயக் குளோரைடுடன் தங்க குளோரைடையும் சேர்ந்த கரைசலைப் பயன்படுத்துகின்றார்கள் .வெள்ளீய சல்பைடு பொன்னிற வண்ணத்திற்கு நிறமூட்டியாக இருக்கிறது .இராணுவ நடவடிக்கைகளில் இந்த வெள்ளீயக் குளோரைடு புகை மண்டலத்தை எழுப்பப் பயன்படுகின்றது .


No comments:

Post a Comment