Thursday, July 4, 2013

Philosophy

தத்துவம் 
பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதன் ஏன் இறக்கவேண்டும் ?
மீண்டும் பிறப்பதற்கு .
அதுதான் பிறந்து இருகின்றோமே 
அப்புறம் ஏன் மீண்டும்  பிறக்கவேண்டும் ?
பிறப்பதெல்லாம் இறப்பதற்காக ,இறப்பதெல்லாம் பிறப்பதற்காக என்பது மீண்டும் மீண்டும் இறந்து பிறந்துகொண்டிருக்கும் மனிதர்களுக்கு மட்டுமல்ல ,இது பிரபஞ்சத்தின் அடிப்படையான விதி ..மனிதனுக்கு பொருந்தும் விதிகள் எல்லாவற்றிருக்கும் இந்த பிரபஞ்சமும் உட்பட்டிருக்கின்றது .
.ஏனெனில் பிரபஞ்சத்தில் இருக்கும் எதுவும் நிலையானதில்லை. கோள்கள் ,விண்மீன்கள் என யாவும் மனிதர்களைப் போல பிறக்கின்றன ,வாழ்கின்றன ஒரு காலகட்டத்தில் அழிந்து போகின்றன .
இயற்கை உயிர்ப்பொருட்களுக்கும் ,உயிரில்லாப் பொருட்களுக்கும் இடையே எந்த வேறுபாடுகளையும் காட்டுவதில்லை.இயற்கையில் இவ்விரு பொருட்களும் ஒன்றுதான் .நாம் தான் உயிர்ப்பொருட்களை .குறிப்பாக மனிதர்களை உயர்வாக இயற்கை மதிக்கும் எனத் தவறாக நினைக்கின்றோம் அதனால் சலுகைகளை வாரி வழங்கும் எனவும் . எதிர்பார்கின்றோம் .உண்மையில் இயற்கை எந்தக் காலத்திலும் எந்தவொரு பாகுபாட்டையும் காட்டியதில்லை.

உயிரில்லாப் பொருள் உயிர்ப்பொருளா வதும்,உயிர்ப்பொருள் உயிரில்லாப் பொருளாவதும் ஒருவகையான உயிர் வேதியியல் மாற்றங்களே .இந்த மாற்றத்தோடு தொடர்புடைய வினைகள் முன்னோக்கிச் செல்லும் போது உயிர்பொருள் உண்டானால், பின்னோக்கிச் செல்லும் போது உயிரில்லாப் பொருளாகும் .இது இயற்கையின் உயிர் வேதியியல் சமநிலை .

No comments:

Post a Comment