Sunday, August 22, 2010

Arika iyarpiyal -2

அறிக இயற்பியல் -2

ஓர் அரசியல்வாதி விட்டுச் சென்ற இடத்தைப் பிடிப்பதற்கு
நான் ,நீ என்று போட்டப் போட்டி .ஆனால் ஓர் அறிவியல்
விஞ்ஞானி விட்டுச் சென்ற இடம் வெகு காலமானாலும்
வெற்றிடமாகவே இருக்கிறது . இதற்குக் காரணம் நான்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை .

ஜார்ஜ் காமோவ் (George Gamow )என்றொரு விஞ்ஞானி.இரஷ்யாவின்
உக்ரெயினில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் . அணுக்கரு
விற்கு திரவத் துளி மாதிரியைப் பற்றியும் ,அல்பா சிதைவுவிற்கு
விளக்கமும்.பேரண்ட பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும்
தெரிவித்தவர் .இவர் எழுதிய பல அறிவியல் நூல்கள் மக்களிடையே
மிகவும் பிரபலமானவை .

மக்களால் கண் மூடித்தனமாகப் பின்பற்றப்படும் மதவாதிகளின்
கருத்துகள் பல இயற்கைக்குப் புறம்பாக இருக்கிறன என்று
சிறு வயது முதற்கொண்டு காமோவ் அடிக்கடி சிந்திப்பார் .
அதை உறுதிப்படுதுவதற்கான வாய்ப்பை எப்பொழுதும் எதிர்
பார்த்துக் கொண்டே இருந்தார் . ஒரு சமயம் தேவாலயத்தில்
ஒரு ஆன்மிகச் சொற்பொழிவாளர்,தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட
சிவப்பு ஒயினும் ,ரொட்டித் துண்டும் ஏசுவின் இரத்தமாகவும்
சதையாகவும் மாறுகிறது என்று சொல்லி ஒவ்வொருவருக்கும்
கொஞ்சம் ஒயினும் ஒரு ரொட்டித் துண்டும் கொடுத்தார் .
தனக்கு அளிக்கப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்ட ஒயினையும் .
ரொட்டித் துண்டையும் விழுங்காமல் வாயில் வைத்துக் கொண்டு
விரைந்து வீட்டிற்கு ஓடி , அந்த ரொட்டித் துண்டை எடுத்து ,
தன்னிடமுள்ள ஒரு பொம்மை நுண்ணோக்கியால் ஆர்வத்துடன்
ஆராய்ந்து பார்த்தார். அது வழக்கமான ரொட்டித் துண்டு போலவே
இருந்தது . இந்த அறிவியல் பூர்வமான சோதனையே பின்னாளில்
தன்னை ஒரு விஞ்ஞானியாக்கியது என்று காமோவ் ஒருமுறை
சொல்லியிருக்கிறார் .

ஆம் ,உண்மைதான் . நீயும் இயற்கையைக் கூர்ந்து கவனித்துவந்தால்
நீயும் கூட சத்தியமாய் ஒரு விஞ்ஞானிதான்.

கேள்வி .2

தானாகக் கீழே விழும் கனமான ,இலேசான குண்டுகள்

கலிலியோ ,தானாகக் கீழே விழும் பொருட்களைப் பற்றி
ஆராய்ந்த போது,கனமான பொருளும்,இலேசான பொருளும்
சம உயரத்தை சம காலத்தில் கடந்து ஒரே நேரத்தில்
தரையில் விழுகின்றன என்பதைக் கண்டறிந்தார் .அதாவது
தானாகக் கீழே விழும் பொருளின் முடுக்கம் அவற்றின்
நிறையோடு தொடர்புடையதாக இல்லை. வெவ்வேறு
நிறையுடைய எல்லாப் பொருட்களும் ஒரே அளவு
முடுக்கத்தையே பெறுகின்றன

கனமான இரும்புக் குண்டு இலேசான மரக்குண்டை விடக்
கூடுதலான ஈர்ப்பு விசையுடன் ஈர்க்கப்பட்டலும் அது தான்
ஏற்படுத்துகின்ற கூடுதலான நிலைமத் தடையால் வேக
மாற்றத்தைக் கட்டுப்படுத்தி எல்லாப் பொருள்களும்
ஒரே மாதிரியான வேக மாற்றத்துடன் விழுவதைப்போல் விழுகின்றன .இந்த சுய கட்டுப்பாடு ஈர்ப்புப்புலத்தில்
மட்டுமே காணப் படுகின்றது.

எல்லா வகையிலும் ஒத்த இரு பந்துகளில் ஒன்று கனமானது ,மற்றொன்று இலேசானது .ஒரு குறிப்பிட்ட
உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் அவற்றைத் தானாகக்
கீழே விழுமாறு செய்ய ,கனமான பந்து முதலில் தரையை
அடைவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

                                         ****************

தானாகக் கீழே விழும் பொருட்களுக்கு வளிமமண்டலத்திலுள்ள

காற்றினால் இயக்கத் தடை ஏற்படுகின்றது .இந்த எதிர் முடுக்க
விசை பொருளின் நிறையைச் சார்திருப்பதில்லை .இது பருமனை
யும் ,புறப்பரப்பின் தன்மையையும் பொருத்திருகிறது. எனவே
எதிர் முடுக்க விசை இரு பந்துகளுக்கும் சமமாகும் . ஆனால் எதிர் முடுக்கம் என்பது எதிர் முடுக்க விசைக்கும் நிறைக்கும் உள்ள
தகவாகும் . எனவே கனமான பந்து குறைவான எதிர் முடுக்கத்தையும்,இலேசான பந்து மிகுதியான எதிர் முடுக்கத்தையும் பெறுவதால் கனமான பந்து முதலில் தரையை  அடைகிறது .

No comments:

Post a Comment