.எண்ணத்தின் குறை
"காவேரி"
நேர் மின் துகளிருந்தால் அங்கே
எதிர் மின் துகளிருக்கும்
அண்டமனாலும் சரி இல்லை
அணுவானாலும் சரி
எப்பொழுதும் சமமாய் இருக்க
ஏற்றத் தாழ்வு எழுந்ததில்லை
காந்த வடமுனை இருந்தால் அங்கே
காந்தத் தென்முனையுமிருக்கும்
உருளும் உலகமனாலும் சரி இல்லை
சுழலும் துகளனாலும் சரி
இணைத் துணையாய் இருக்க
என்றைக்கும் இவை பிரிந்ததில்லை
உயிரினத்தில் ஆண் இருந்தால் அங்கே
உயிர் தர பெண்ணுமிருக்கும்
அதாம்- ஈவாள் காலம் தொட்டே
ஆணும் பெண்ணும் சம விகிதமே
ஆணே போதும் பெண் வேண்டாமென்றால்
அந்த இயற்கையும் மிரண்டு போகாதா?
எப்போதும் ஆணொன்றும் பெண்னொன்றும்
எல்லோருக்கும் பிள்ளைகளாய் பிறப்பதில்லை
இவருக்கு இரண்டும் பெண்னென்றால்
அவருக்கு இரண்டும் ஆண்கள்
இது இயற்கையின் திருமறை
எல்லாம் நம் எண்ணத்தின் குறை
No comments:
Post a Comment