அறிக இயற்பியல் - 3
இரபீந்தர நாத் தாகூர்
(1861 -1941) இந்தியத் திருநாட்டிற்கு தேசிய கீதத்தைத்
தந்தவர் . இரபீந்திர நாத் தாகூர் ஒரு சிறந்த கவிஞர்
மட்டுமில்லை ,நல்ல இசைக் கலைஞரும் ,
ஓவியம் தீட்டுவதில் வல்லவரும் ,நாவல் ,நாடகம்
எழுதுவதில் ஒரு படைப்பாளியாகவும் இருந்தார் .இவருடைய
கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக 1913 -ல் இலக்கியத்திற்கான
நோபெல் பரிசைப் பெற்றார் .சாந்தி நிகேதனில் ஒரு ஆஷ்ரமம்
நிறுவி அங்கு ஒரு மாதிரிப் பள்ளிக்கூடத்தையும் நிறுவினார் .
தாகூர் ஒரு சிறந்த படைப்பாளியாக வருவார் என்று அவருடைய
தந்தையாரான தேவேந்திர நாத் தாகூருக்குத் தெரிந்திருந்தது. அந்த
இரகசியத்தை நாமும் தெரிந்து வைத்துக் கொண்டால் நம்
பிள்ளைகளையும் ஒரு சிறந்த வெற்றியாளனாக உருவாக்க முடியுமே . தாகூர் சிறு பிள்ளையாக இருக்கும் போது கிடைக்கும் காகிதங்களில் கவிதை என்று எதையாவது கிறுக்கி
அதைத் தன் தந்தையிடம் படித்துக் காட்டுவார் . அது அபத்தமாக
இருந்தாலும், அவரது தந்தையார்அதை வெகுவாகப் பாராட்டுவார் . அத்தோடு நில்லாமல் அதற்காக ஒருகைக் கடிகாரமும் பரிசு
அளிப்பார் . இந்த மனப்பூர்வமான பாராட்டும் ,பரிசும்
அவரை எதிர்காலத்தில் ஒரு தலை சிறந்த கவிஞனாக்கிவிட்டது.
உங்கள் குழந்தையினுடைய முயற்சி சிறிதெனினும் ,அதை வெகுவாகப் பாராட்டப் பழகிக்கொள்ளுங்கள் . அதைவிட
ஒரு சிறந்த ஊக்கம் உங்கள் குழந்தைக்கு இருக்கமுடியாது .
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் -2 ல் வந்த அஜித் அல்காவும், அந்தச் சிறுவன் ஸ்ரீகாந்த்-ம் வெற்றி மேடையைத்
தொட்டதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுடைய
பெற்றோர்கள் தொடர்ந்து அளித்த ஊக்கம்தான் . நம்புங்கள் ,எல்லாம் நம் எண்ணத்திலும் ,கையிலும்தான் இருக்கிறது .
*****************
அலைவு தானம் மாறும் ஊசல்
ஓர் உள்ளீடற்ற உலோகக் கோளம் நீரால் நிரப்பப்பட்டு ஊசல் குண்டாகஎடுத்துக் கொள்ளப்பட்டது. அக் குண்டின் அடிப்பாகத்தில்
ஒரு சிறிய துளையை ஏற்படுத்த நீரானது மெதுவாக வெளியேறும் .
ஊசல் அலைவுறும் போது இந்த வெளியேற்றம் ஏற்பட ,
ஊசலின் அலைவு நேரத்தில் என்ன மாற்றம் நிகழும் ?
*******************
ஊசல் குண்டிலிருந்து நீர் வெளியேறும் போது ஈர்ப்பு மையம் மாறுகிறது .கோளம் முழுதும் நீரால் நிரப்பப்பட்டிருக்கும்
போது அதன் ஈர்ப்பு மையம் கோளத்தின் மையமாக இருக்கும் .
நீர் துளை வழியாக வெளியேறும் போது பாதியளவு நீர் வெளியேறும் வரை ஈர்ப்பு மையம் கீழிறங்க ,ஊசலின்உண்மையான நீளம் அதிகரிக்கிறது .அதனால் அலைவு நேரம் தொடர்ந்து
அதிகரிக்கிறது . அதாவது ஊசல் மெதுவாக அலைவுறுகிறது .மீதி நீர்
வெளியேறும் போது வெற்றுக் கோளமாகும் வரை அதன் ஈர்ப்பு மையம் மேலேறிக் கோளத்தின் மித்தை மீண்டும் அடைகிறது . அப்போது அலைவு நேரம் தொடர்ந்து அதிகரித்து தொடக்கநிலை மதிப்பை எட்டுகிறது .
*****************
No comments:
Post a Comment