Thursday, October 14, 2010

Arika ariviyal-11

Frank Whittle (1907 - 1996 )





பிராங்க் விட்டல் சிறுவனான இருந்தபொழுதே தான் ஒரு
பையிலட்டாக வரவேண்டும் என விரும்பினார் .பல புதிய
பொருட்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் கொண்ட
இவருடைய தந்தை வெகு இயல்பாக இவருக்கு ஒரு
சரியான வழிகாட்டியாக அமைந்தார் .பள்ளியில்
கற்றுக்கொண்டதைவிட தன் தந்தையிடம் பெற்ற பயிற்சியே
அவருடைய தனித் திறமையை வெளிக்காட்ட உதவியாக
இருந்தது .இளம் வயதில் அவர் தன் தந்தைக்குஒரு
உண்மையான மெக்கானிக்காக செயல்பட்டதால் ,தொழில்
நுட்ப அறிவை அனுபவ ரீதியாகப் பெற்றார்.

ஒரு முறை கல்லூரியில் ' விமானங்களின் வடிவங்களில்
எதிர்காலப் புதுமைகள் ' என்ற தலைப்பில் படிக்குக் எல்லா மாணவர்களையும்கட்டுரை வரையச் சொன்னார்கள்.
அப்போது சுழலி ( propeller ) இழுத்துச்செல்லும் விமானங்களே
அதிகம் இருந்தன . எனவே பெரும்பாலானமாணவர்கள்
சுழலியின் இயக்கத்தை அதிகரிப்பது பற்றியே
விவரித்திருந்தார்கள் .ஜெட் விமானங்கள் பற்றி
முதன்முதலாக பிராங்க் விட்டல் தன் கட்டுரை வாயிலாகத்
தெரிவித்தார் . என்றாலும் இவருடிய கருத்தை ஆசிரியர்கள்
அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை . மனம் தளராத
பிராங்க் விட்டல் பல இடையூறுகளுக்குப் பின்னர் 1937 ல்
தனது முதல் ஜெட் விமானத்தை சோதனை ஓட்டம் விட்டார் .
1941 ல் குறைபாடுகளற்ற ஜெட் விமானம் இவரால்
உருவாக்கப்பெற்றது .

ஒரே சிந்தனை ஒரே முடிவு அதுவே இவரது வெற்றிக்கு
காரணமாக இருந்தது . நாமும் அப்படி விடா முயற்சியுடன்
செயல் பட்டால் வெற்றியைத் தேடி நாம் போகவேண்டாம், அந்த வெற்றியே நம்மைத் தேடி வரும்



ஒரு பேருந்து ஓரிடத்தில் நின்று விட்டது .இறங்கி வண்டியைத் தள்ளுமாறு பயணிகளை ஓட்டுனர் கேட்டுக் கொண்டார் .
இரவு நேரம் என்பதால் பயணிகள் யாரும் இறங்கவில்லை .
வண்டிக்குள் இருந்தே வண்டியை முன்பக்கமாகத்
தள்ளினர் .வண்டி நகராது என்பது நம் எல்லோருக்கும் தெரியும் . ஏனெனில் எவ்வளவு விசையுடன் வண்டியைக் கையால்
முன்னுக்குத் தள்ளுகின்றாரோ அதே விசையால் காலால்
பின்னுக்குத் தள்ளுகிறார் .இதில் வண்டியின் மீது
செயல்படும் விசை சுழி யாகின்றது .இது எந்த
உந்தமாற்றத்தையும் தோற்றுவிக்காது .

ஓர் ஏரியில் ஒரு பாய்மரப்படகு ஓய்வு நிலையில்
இருக்கின்றது .பாய்மரம் படகின் மையக் கோட்டில் செங்குத்தாக இருப்பதாகக் கொள்வோம் .பாய்மரத்திற்கு முன்னால்
ஒரு மின் விசிறி படகில் பொருத்தப் படுகின்றது .மின்
விசிறி மூலம் காற்றை பாய்மரம் நோக்கிச் செலுத்தினால்
படகு நகருமா ?
                                                  ******************



குறிப்பிட்ட சூழலில் படகை இயக்க முடியும் . பாய்மரம்
நோக்கிச் செல்லும் காற்று துணி விரிப்பில் பட்டு
மீளப்பெறவேண்டும் . அப்போது மட்டுமே படகு இயங்கும்.
ஆனால் படகுடன் பொருத்தப்பட்ட மின் விசிறி-பாய்மரத்துணி
ஒரு திறவலான அமைப்பாக உள்ளது .அதனால் படகின் இயக்கத் திசையில் மட்டுமே உந்த மாற்றம் ஏற்படும் என்று கூறமுடியாது .
ஒரு காற்றுமூலக்கூறு விசிறிக்கு முன்னால் ஓய்வாக
இருப்பதாகக் கொள்வோம் .இது மின் விசிறியின் இறக்கையால்
முன்னுக்குத் தள்ளப்பட காற்று P என்ற உந்தத்தைப் பெறும்.
அதே உந்தத்தைப் படகு (-P ) மின் விசிறி மூலம் எதிர்
திசையில் பெறும். முன்னுக்குத் தள்ளப்பட்ட காற்று
மூலக்கூறு பாய்மரத் துணியில் விழுந்து மீட்சி மோதலால்
மீண்டால் அதன் உந்த மாற்றம் எதிர்திசையில் அதன்
உந்தத்தைப் போல இரு மடங்காகும் (-2p ) இந்த உந்தமாற்றம்
படகுக்கு பரிமாற்றம் செய்யப்படுவதால் ,அது இயங்கு திசையில்
அதே உந்தமாற்றத்தைப் (2p ) பெறும் . எனவே படகு பெறும்
மொத்த உந்தம் 2p - p = p இதனால் படகு முன்னுக்கு நகரும் .ஆனால் காற்று மூலக்கூறு பாய்மரத் துணியில் பட்டு மீளாவிட்டால் படகு
பெறும் மொத்த உந்தம் சுழியாகி விடும் .

No comments:

Post a Comment