Tuesday, October 19, 2010

Arika ariviyal-12

எடையில் மாற்றம் இருக்குமா ?


குறி முள்ளினால் எடை காட்டும் சுருள் வில் தராசுத்
தட்டில் W எடையுடைய நீருடன் கூடிய ஒரு பீக்கர் வைக்கப்பட்டுள்ளது .ஒரு நூலின் நுனியில் ஒரு
கல்லைக் கட்டி அதை அப் பீக்கரில் உள்ள நீரில்
பீக்கரின் சுவர்களைத்தொடாத வண்ணம் முழுதும்
அமிழ்த்திருக்குமாறு தொக்கவிடப் படுகின்றது .
இப்பொழுது எடை காட்டும் தராசில் குறி முள்ளில்
விலக்கம் இருக்குமா ? அதாவது எடை கூடுமா
அல்லது குறையுமா அல்லது மாற்றம் இன்றி இருக்குமா ?.
                                        *************
பீக்கரைத் தொடாமல் கல் தொங்குவதால் தராசின்
குறிமுள்ளில் எந்தவித விலக்கமும் இருக்காது என்று
முடிவு செய்தால் அது தவறாகும் . நீருடன் கூடிய
பீக்கருக்கு வெளியே கல் இருந்தாலும் ,இல்லை
உள்ளே இருந்தாலும் அந்த அமைப்பின் எடையில்
வேறுபாடு காணப்படுவதில்லை .நீரில் அமிழதிருக்கும்
கல் பெறும் எடை இழப்பு என்பது ஒரு தோற்ற
அளவீடுதான் .அதனால் தான் மிக எளிதாக எடை
இழப்பை மீட்டுப் பெற முடிகிறது .ஆற்றல் மாறாக்
கோட்பாட்டின் படி (இங்கு நிறை மாறாக் கோட்பாடு ) ஓர்
அமைப்பின் மொத்த நிறை மாறாததாகும்.
நீருடன் கூடிய பீக்கர் மற்றும் கல்லில் எடை மாறாதிருக்க வேண்டுமானால் கல் பெறும் தோற்ற எடை இழப்பை
நீருடன் கூடிய பீக்கர் பெறவேண்டும் .எனவே
நீருடன் கூடிய பீக்கரின் எடையோடு கல்லில் எடை
இழப்பும் சேர்ந்து காட்டப்படுவதால் குறிமுள் அதிக
அளவு காட்டும் எனலாம் .

 நீருக்குள் விரலை வைத்தால்

தராசின் ஒரு தட்டில் நீருடன் கூடிய பீக்கரும் ,மறுதட்டில்
அதற்குச் சமமான எடையும் வைக்கப்பட்டுள்ளது .பீக்கரின்
சுவரைத் தொடாமல் நீருக்குள் கையின் ஒரு விரலை
வைத்தால் தராசின் சமநிலை பாதிக்கப்படுமா ? தராசின்
குறி முள் எப்பக்கம் விலகும்?
                                              ****************
 நீருக்குள் விரலைஅமிழ்த்தும்போது அதனால்
வெளியேற்றப்பட்ட நீரின் எடை அம மனிதருக்கு எடை
இழப்பாக அமைகிறது .இது நீரை அழுத்துவதால்
நீருள்ள பீக்கரின் எடை அதிகரிக்கிறது .

1 comment: