Wednesday, October 20, 2010

Vanna vanna ennangal-22



மனதிற்குள் ஒரு மிருகம்  

மனிதனொரு மிருகம் என்றல்

மனமொரு குரங்கு

கணக்குப் போடும் அவனைப் புலி என்றனர்
சூழ்ச்சி செய்யும் அவனை நரி என்றனர்
வீரமிக்க அவனைச் சிங்கம் என்றனர்
பாரம் சுமக்கும் அவனைக் கழுதை என்றனர்
தூரம் ஓடும் அவனைக் குதிரை என்றனர்
அப்பாவியான அவனைப் பசு என்றனர்
சிதறிச் சாப்பிடும் அவனைப் பன்றி என்றனர்
கொறித்துண்ணும் அவனை எலி என்றனர்
நன்றி உள்ள அவனை நாய் என்றனர்
மானமுள்ள அவனைக் கவரி மான் என்றனர்
முரடனை முட்டும் காளை என்றனர்
குள்ளனை தத்தும் தவளை என்றனர்
சுறுசுறுப்பான அவனைத் தேனீ என்றனர்
உன்னிப்பாகக் கவனிக்கும் அவனைக் கழுகு என்றனர்
சந்தடி இன்றி நடக்கும் அவனைப் பூனை என்றனர்

குண்டான அவளை யானை என்றனர்
குள்ளமான அவளை சிம்பான்சி என்றனர்
மெதுவாக நடக்கும் அவளை ஆமை என்றனர்
குண்டான அவளை யானை என்றனர்
அழகாகப் பாடும் அவளைக் குயில் என்றனர்
ஒயிலாக நடக்கும் அவளை மயில் என்றனர்
மாற்றிச் சொல்லும் அவளைப் பச்சோந்தி என்றனர்
போலிக்கண்ணீர் வடிக்கும் அவளை முதலை என்றனர்
கருப்பாய் இருக்கும் அவளைக் காக்கை என்றனர்
உயரமாய் இருக்கும் அவளைக் கொக்கு என்றனர்
நளினமாய் பேசும் அவளைக் கிளி என்றனர்
அன்பு காட்டும் அவளை அன்றில் என்றனர்
மூக்கு நீண்ட அவளை மரக்கொத்தி என்றனர்
மெல்ல நடக்கும் அழகுப் பெண்ணை அன்னம் என்றனர்
பறந்து செல்லும் அவளைப் பட்டாம் பூச்சி என்றனர்

மனிதனுக்குள் ஒரு மிருகம் இருக்கின்றது
ஒவ்வொரு மனிதனுக்குள் ஒவ்வொரு மிருகம்
ஆனால்
எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் -அது

குரங்கு

மனமொரு குரங்கு -மனித
மனமொரு குரங்கு
மனதின் தாகம் மக்கள் மத்தியில்

குரங்குகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்

கருங் குரங்கு, செங் குரங்கு,என நிறத்தால்
கெட்ட குரங்கு , நல்ல குரங்கு என பண்பால்
வத்தக் குரங்கு ,குண்டுக் குரங்கு என உருவத்தால்
வன் குரங்கு வாலில்லாக் குரங்கு என செயலால்
சுட்டிக் குரங்கு கெட்டிக் குரங்கு என குறும்பால்
சின்னக் குரங்கு கிழட்டுக் குரங்கு என வயதால்

குரங்குகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்

மனமொரு குரங்கு -மனித
மனமொரு குரங்கு

No comments:

Post a Comment