Wednesday, October 13, 2010

vinveliyil ulaa -4

வட்டார விண்மீன் கூட்டங்கள்





வைரங்களை விண்வெளி எங்கும் அள்ளித் தெளித்தார் போல
இரவில் வானம் விண்மீன்களால் மினுமினுப்பதைப் பார்த்து மயங்காதவர்கள் யாருமில்லை. எல்லா வயதினருக்கும்
ஏற்றவாறு இயற்கை நித்தம் ஒளிபரப்பும் முழு இரவு நேரக்
காட்சி ! ஒவ்வொரு நாள் இரவிலும் வேறுபாடு உணரமுடியாத
ஒரே மாதிரியான காட்சிதான் என்றாலும் சிறிதும் அலுப்புத்
தட்டாத ஒரு காட்சி. இதில் நிலவும் வந்து தோன்றிவிட்டால் .
வெட்கமின்றி அத்துமீறிச் செல்லும் கற்பனைகளுக்கு
ஒரு வரம்பே இல்லை.

காலமெல்லாம் களிப்பூட்டிய இந்த வானம் இன்றைக்குத்
தனிப் பெரும் அறிவியலாக வளர்ந்துள்ளது. ஒரு பக்கம்
இயற்பியல் கொள்கைகள் - பேரண்டத்தின் எல்லையையும்
அண்டம் மற்றும் அண்டத்திலுள்ள விண்மீன்களின் இயக்கங்களையும் .விண்மீன்களின் வளர்ச்சிப் படிகளையும்
அலசி ஆராய்கின்றன. மறு பக்கம் அதற்கு ஆதாரமான
சோதனை முறைகள் - விண்ணியல் தொலைநோக்கிகளின் வளர்ச்சி ,விண்மீன்களின் இருப்பிடம் மற்றும் அவற்றின்
இயற்பியல் தன்மைகளை அறிதல், புதிய வசிப்பிடங்களைத்
தேடி ,பூமி தவிர்த்த பிறசூரியக் கோள்களை எட்ட விண்வெளிப்
பயணம் போன்றவை விரிவாக வளர்ந்து வருகின்றன
ஒரு சமயம் திக்குத் தெரியாத நடுக் காட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது,துருவ விண்மீன் அவர்களுக்கு
வடக்குத் திசையைக் காடும் வழிகாட்டியாக விளங்கியது .
விண்ணில் இருந்து கொண்டு பூமியில் சரியாக வழிகாட்டும்
இந்த வழிகாட்டியின் பயனைத் தெரிந்து கொண்ட பின்னர்,
விண்மீன்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம் மக்களைத் தொற்றிக் கொண்டது. பழங்காலத்தில்
இதில் கடல் வாணிகம் மேற்கொண்ட பாபிலோனியர்கள்,
கிரேக்கர்கள் இந்தியர்கள், சீனர்கள் மற்றும் அரேபியர்கள்
தனித்த ஈடுபாடு கட்டினார்கள். ஆனால் மற்றவர்களைப்
போலன்றி, இந்தியர்கள் .விண்மீன்களைப் பற்றிய
விவரங்களை அறிந்து கொள்ளவோ அல்லது விண்மீன்
கூட்டங்களைப் பற்றிய வரைபடங்கள் தயாரிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. மாறாகக் கதிர்வீதியில் (eccliptic )
உலா வருவது போலத் தோன்றும் சூரியன் மற்றும் நிலவின்
சார்பு இயக்கங்களை மிகத் துல்லியமாக அறியும் முயற்சியில் ஈடுபட்டனர் .அப்போது கதிவீதியில் ஒட்டியிருக்கும் சில
குறிப்பிட்ட விண்மீன் கூடங்களை மட்டும் ஓரளவு தெரிந்து
கொள்ள முயன்றனர் .இதனால் அவர்கள் நூற்றாண்டு கால காலண்டர் ,சந்திர-சூரிய கிரகணங்கள் ஏற்படும் காலங்கள்
இவற்றை உருவாகினார்கள் .இதற்காக கதிர்வீதியை 30 டிகிரி கோணத்துடன் 12 சம பகுதிகளாகப் பிரித்தனர் .ஒவ்வொரு
பகுதியையும் இராசி மண்டலம் என அழைத்தனர் .
சூரியன் கதி வீதியில் வளம் வருவது போலத் தோன்றும்
போது,30 நாட்கள் வீதம் ஒவ்வொரு இரசிமடலத்தையும் கடந்து செல்கிறது .இதே கதிர்வீதியை 13 டிகிரி 20 நிமிடம்
கோணத்துடன் 27 சம பகுதிகளாகப் பிரித்து அதை நட்சத்திர
மண்டலம் என்றனர் .இராசி மண்டலம் என்பது
அவ்வட்டாரத்திலுள்ள விண்மீன்களால் குறிப்பிடப்படுகிறது .
ஆனால் நட்சத்திர மண்டலம் என்பது கதிர்வீதியில் ஒரு
பகுதியை மட்டுமே குறிப்பிடுகிறது. ஒரு குறிப்பிட்ட விண்மீனைக் குறிப்பிடுவதில்லை.ஆனால் பழங்காலத்தவர்கள் நிலா உலா
வரும் பாதையை எடுத்துச் சொல்வதற்கு எதுவாக
ஓரளவு தோராயமாக நட்சத்திர மண்டலங்களையும்,
அவ வட்டாரத்திலுள்ள முதன்மை விண்மீன்களால்
குறிப்பிட்டனர் .மிகச் சரியாக எல்லா சுட்டு விண்மீன்களும்
கதிர்வீதியில் அமையாததால் அதில் பல விண்மீன்கள்
கதிர்வீதியை விட்டு ஓரளவு விலகி இருந்தன .
இந்தியாவில் வானவியல் என்பது சோதிடத்தோடு தொடர்பு
படுத்தப்பட்டு வளர்ந்தது .அதனால் அது அறிவியல் சார்ந்த
வானவியலின் வளர்ச்சியை பெரிதும் மட்டுப் படுத்தியது.
சூரியன்,சந்திரன் மற்றும் சூரியக் குடும்பத்தில் பூமியை
ஒட்டியுள்ள கோள்கள் இவையெல்லாம் பூமியில் வாழும்
மனிதர்களின் எதிர்காலத்தை வரையறுப்பதாக
நம்பினார்கள். நிஜமான நிகழ் காலத்தை விட்டு விட்டு நிழலான எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ள எல்லோரும் உள்ளூர ஆர்வப்பட்டனர் என்பதால் சோதிடமும் காலத்தால்
நிலைப்பட்டது .
இன்றைக்கு வானவியல், சோதிடத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது .ஆராய்ச்சியாளர்களுக்கு விண்வெளி ஓர் ஆய்வுக் கூடம் ,மாணவர்களுக்கு ஒரு பல்கலைக் கழகம்
சாதாரண மக்ககளுக்கு அது ஒரு பிருமாண்டமான பொருள்காட்சி சாலை .பேரண்டத்தின் முதலும் முடிவும்,பெர்ணடத்தின் எல்லை, எண்ணற்ற அண்டங்களும் விண்மீன்களும், அவற்றின் ஓய்வற்ற
இயக்கம், விண்மீன்களின் இறப்பையும் பிறப்பையும் காட்டும் பழையன கழிதலும் ,புதியன் புகுதலும், இவற்றைப் பற்றி என்னதான்
முயன்றாலும் எட்டாத தொலைவில் இருக்கின்ற அவற்றைப் பற்றி
முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு
கிலோ மீட்டர் தொலைவிலும் ஓர் அதிசயத்தை
புதைத்து வைத்திருக்கின்ற விண்வெளி நமக்கு எப்போதும் ஒரு புதிர் தான் .

No comments:

Post a Comment