எழுதாத கடிதம் -13
அன்பார்ந்த ஊராட்சி,பேரூராட்சி,,நகராட்சி,மாநகராட்சித்
தலைவர்களே,மற்றும் அலுவலர்களே ,
சொந்த ஊரிலும் சரி ,வெளி ஊரிலும் சரி வீதிகளில் நடந்து
செல்லும் போது ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் குப்பைகளைக்
கண்டு மனம் வெறுத்து நொந்து போவேன் .குறைந்தபட்ச
அழகு கூட வேண்டாம் கொஞ்சம் சுத்தமாவது
வேண்டாமா ? பல இடங்களில் குப்பை கொட்டிக் கொட்டி
அந்த இடமே ஒரு மேடாய்க் காட்சியளிக்கும் .காகிதங்கள்,
பாலிதீன் பைகள் ,வேண்டாத கழிவுப்பொருள்கள் போன்றவை
காற்றில் பறந்து எல்லா இடங்களையும் அசுத்தப்
படுத்தும் .சாக்கடைகளில் விழுந்து வழிந்தோடும் கழிவு
நீரைத் தேக்கி கொசுக்களின் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும் ."இந்தியா ஒரு திறந்த வெளி குப்பைக் கூடம் " என்று சொல்வதை நாம் எப்படி மறுக்க முடியும் ?
இதற்கு மக்களைக் குறை சொல்லிப் பயனில்லை.
ஏனெனில் மக்கள் ஆண்டாண்டு காலமாக இந்தப்
பழக்கத்தை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு
பாரம்பரியமாக வழக்கப்படுத்திக் கொண்டு வாழ்ந்து
வருகிறார்கள் .அதனால் தான் தெருக்க்களைத் தினந்தோறும்
கூட்டிச் சுத்தப்படுத்தும் பணிக்குத் துப்புரவுப் பணியாளர்களை நியமித்தோம் .இதில் நிச்சியமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியே ஆகவேண்டும் .குப்பைகளைக் கண்ட கண்ட இடங்களில் போட்டுவிட்டு ,பின் அதை ஒருவர் துப்புரவு செய்தல்
என்பது வேண்டாத வேலை . குப்பைகளை
அப்படிப் போடாவிட்டால் கடினமான ,தவிர்க்கப்படவேண்டிய
அந்த துப்புரவுப் பணியும் இல்லை . துப்புரவு செய்யும் அந்தப் பணியாளர்களின் உழைப்பு இதைவிடச் சிறந்த, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பை நாம் நம்மையும் அறியா நிலையில் தொடர்ந்து செய்துவருகிறோம் .
வேலை இருக்கிறது இருந்தும் பலருக்கு வேலை வாய்ப்பு
இல்லை என்பதால் இது யாருக்கும் உறுத்தலாகத்
தோன்றுவதில்லை .
நாம் வேற்று நாட்டின் சுத்தத்தைப் பார்க்கும் போதும் ,
வேற்று நாட்டான் நம் வீதிகளின் அசுத்தங்களைப் பார்க்கும்
போதும் அவமானப் படவேண்டியதாக இருக்கிறது .
மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த
வேண்டியது நம் கடைமையகிறது .
தனார்வத் தொண்டர்களை கொண்டு ஓர் அமைப்பை
ஏற்படுத்தி அவர்கள் மூலம் இதைச் செய்யலாம் .
வீதிகள் தோறும் ,முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள்,பொதுவிடங்கள் ,தெருக்களின் சந்திப்புகளில்
நிரந்தரமாக குப்பைத் தொட்டிகளை நிறுவ வேண்டும் .
அப்போதுதான் போட வேண்டிய குப்பைகளை போட
வேண்டிய சரியான இடத்தில்போடும் பழக்கம் வழக்கமாகிவரும். குப்பைகளை அகற்றுவதற்கு எளிய வழிமுறைகளை
ஏற்படுத்தாமல் ,குப்பைகளை வெளியில் போடாதீர்கள்
என்று சொல்வதால் மட்டும் பிரச்சனை தீர்வாவதில்லை.
நல்ல நல்ல மாற்றங்களை உட்புகுத்துங்கள் .நல்ல
சமுதாயம் நாளை உருவாகட்டும் .
அன்புடன்
காவேரி
No comments:
Post a Comment