Monday, October 25, 2010

vinveliyil ulla-5

வட்டார விண்மீன் கூட்டங்கள்


வட்டார விண்மீன் கூட்டங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட வெளியில் அருகருகே இருக்கும்

விண்மீன்கள் இல்லை .அவை குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்ட திசைகளில் வெவ்வேறு தொலைவுகளில்

இருக்கும் விண்மீன்களாகும்.. நெடுந்தொலைவில் இருப்பதால்

அவற்றின் இடைத்தொலைவை அறியமுடிவதில்லை .வானக் காட்சி, ஓர் ஒளிப்படம் போல இரு பரிமாண வெளியில்

தோன்றுவதால் ,வெவ்வேறு தொலைவுகளில் உள்ள எல்லா விண்மீன்களும் சம தொலைவில் இருப்பது

போல மாயத் தோற்றம் தருகின்றன . பரந்த விண்வெளியை நாம் முழுமையாக ,முப்பரிமாண வெளியில் காண முடியாததால், இப்படி ஏற்படும் தோற்றப் பிழையைத்

தவிர்த்துக் கொள்ள முடியாதிருக்கிறது.



தொலைவு அதிகரிக்க உருவம் சிறுத்துவிடும். ஏறக்குறைய 150 மில்லியன் (15 கோடி ) கி.மீ

தொலைவிலுள்ள 0.7 மில்லியன் கி.மீ ஆரமுள்ள நமது சூரியனே

ஒரு சிறிய நெருப்புக் கோளம் போலக் காட்சியளிக்கிறது

இதைவிடப் பல மடங்கு தொலைவிலுள்ள சூரியன் போன்ற, சூரியனை விடப் பெரிய விண்மீன்கள்

மட்டுமின்றி, ஆயிரம் கோடி விண்மீன்கள் அடங்கிய அண்டங்கள் கூட ஒரு சிறிய ஒளிப்புள்ளியாகத் தோன்றுவதால், விண்மீன்களின் வட்டாரங்களில் இந்த அண்டங்களும் இடம்பெறுகின்றன. இது தவிர கொத்துக் கொத்தாய் அண்டங்களும் (Cluster )

பனி மூட்டம் போன்ற நெபுலாகளும் அங்குமிங்குமாய் நிறைந்துள்ளன .

பூமியில் இருந்துகொண்டு இரவில் வானத்தைப் பார்க்கும் போது விண்வெளியில் நீந்தும் விண்மீன்கள் எல்லாம் எப்போதும் ஒரே இடத்தில் இருப்பது போலத் தோன்றுவதில்லை. பூமி ஒரு சாய்வான அச்சு பற்றித் தற்சுழலுவதால் ,இந்த விண்மீன்கள் எல்லாம்

சூரியனைப் போல ,கிழக்கிலிருந்து மேற்காக ஊர்ந்து செல்வது போல் தோன்றுகின்றன .அந்த அச்சும் அசைவாட்டமாய் வட்டமிடுவதால்

பருவ காலங்களுக்கு ஏற்ப இந்த விண்மீன் கூட்டங்கள் மாறி மாறி காட்சிதருகின்றன. ஓராண் டுகால வட்டச் சுற்றுமுறையில்

பருவகாலத்திற்கு ஏற்ப மாறி மாறித் தோன்றும் விண்மீன் கூட்டங்களைப் பற்றி பழங் காலத்திய தன்னார்வலர்கள் முதன்முதலாக இனமறிந்தார்கள்

இன்றைய விண்மீன் கூட்டம் பற்றிய வரைபட வானவியல் உண்மையில் இவர்கள் திரட்டித் தந்த அடிப்படை விவரங்களிளிருந்தே தொடங்கி இருக்கிறது. இதை வானவியலின் முதல் பாடம் என்று கூடக் கூறலாம். வானவியலில் ஈடுபாடு கொள்வோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ஒரு விண்மீன் கூட்டத்தின் அமைவிடத்தை அறிந்து கொள்வதாகும்.

வானத்தில் தோன்றும் இந்த வட்டார விண்மீன் கூட்ட ங்களின் சார்பு இருப்பிடம் பற்றியும் ,தொடுவானத் தளத்தோடு அவை ஏற்படுத்தும் கோணம்

பற்றியும் ஓரளவு அறிந்தவர் ,வழியேதும் புரியாத திக்குத் தெரியாத காட்டில் அல்லது இருண்ட நடுக்கடலில் தத்தளிக்கும் போது இதன் மூலம் அவர் தன இருப்பிடத்த்தையும், காலத்தையும் மட்டுமின்றி செல்லும் திக்கையும் அறிந்து கொள்ள முடியும். எப்பக்கம் சென்றால்,பாதுகாப்பான பகுதிக்குச் சென்றடையலாம் என்பதையும்

கூட அவரால் தீர்மானிக்கமுடிகிறது. இது சூரியன் தொடுவானத் தளத்தோடு ஏற்படுத்தும் கோணத்தைக் கொண்டு நேரத்தையும் ,திசையையும் குறிப்பிடுவதைப் போல, தரையில் செங்குத்தாய் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு குச்சியின் நிழல்

காலையில் மேற்குப் பக்கமாகவும், மாலையில் கிழக்குப் பக்கமாகவும் விழும். அந்த நிழலின் உயரத்தைக் கொண்டே காலத்தையும் மதிப்பிடமுடியும் .

அனுபவப்பட்டவர்களுக்கு இந்த குச்சி தேவையே இல்லை.

இந்த அனுபவமே பழங் காலத்திய மக்களிடையே இராக் கால வானத்தை உற்றுப் பார்க்கும் பழக்கத்தை வெகுவாகத் தூண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment