Wednesday, October 6, 2010

vanna vanna ennangal-19

முரண்பாடுகள்




அன்றைக்கு ..........

மரமேறி விளையாடாதேன்னு சொன்னாங்க

மாற்றான் தோப்பு மாங்காய் இனிக்குமென்று

மறைந்து இருவர் திருடிச் சுவைத்தனர்

       இன்றைக்கு ...........

       ஒருவன் காவலனாகப் பதவியில் அமர்ந்தான்

       ஒருவன் திருடனாகிச் சிறையில் அடைந்தான்

அன்றைக்கு .......

சுவரேறிக் குதிக்கதேன்னு சொன்னாங்க

சுவரேறிக் குதிப்பது தனிமனிதச் சுதந்திரமென்று

சுவரேறி இருவர் விழுந்து காயப்பட்டனர்

         இன்றைக்கு ........

        ஒருவன் மரமேறித் தேங்காய் பறித்து தவிக்கிறான்

       ஒருவன் கட்சி விட்டு கட்சி தாவி தழைக்கிறான்

அன்றைக்கு .......

பொய் சொல்லாதேன்னு சொன்னாங்க

பள்ளிக்குப் போய் பாடம் படிக்கிறேனென்று

பகல் காட்சியில் இருவர் படம் பார்த்தனர்

         இன்றைக்கு .........

        ஒருவன் வக்கீலாகி மன்றத்தில் வாதாடுகிறான்

        ஒருவன் பொய்சாட்சியாகி மனம் வருந்துகிறான்

அன்றைக்கு .......

திருடாதே திருடாதேன்னு சொன்னாங்க

திருட்டு சுகம் கிடைப்பது இலவசமென்று

திருந்தாது இருவர் தினமும் திருடினர்

         இன்றைக்கு ........

        ஒருவன் அரசியலைத் திருடி தலைவனாய் இருக்கிறான்

       ஒருவன் பாவம்செய்து பகைவனாய்த் திரிகிறான்

அன்றைக்கு .......

தூக்கம் கெடுத்து முழிக்காதேன்னு சொன்னாங்க
 
தூங்குவது போல் பாவனை காட்டி  

இச்சையால் இருவர் காமம் படித்தனர்

        இன்றைக்கு .....

ஒருவன் மா மாமாவாகி முன்னுக்கு வருகிறான்

ஒருவன் மரணப்படுக்கையில் நோயில்  வாடுகிறான்

அன்றைக்கு .....

சான்றோர் சொல் கேளுன்னு சொன்னாங்க

சாகாத சமுதாயம் வீழாதிருக்க வேண்டுமென்று

வாழும் எல்லோரும் நன்னெறி கேட்டனர்

        இன்றைக்கு ......

       ஆன்றோர் மொழிகள் முரண்பாடாய்த் தோன்ற

       அறிவுரைகள் யாருக்கும் உடன்பாடில்லை

No comments:

Post a Comment