Tuesday, October 12, 2010

vanna vanna ennangal-20

எண்ண எண்ண வண்ணங்கள்


வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கைக்கும் தோல்விகளுக்கும்
உள்ளார்ந்த ஒரு தொடர்பு இருக்கிறது .இந்த உண்மையை
அவர்களைத் தவிர மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து
கொள்ள முடிவதில்லை .

சாதனையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வெற்றிகளைக் காட்டிலும்
துயரூட்டிய தோல்விகளே அதிகம் கற்றுக் கொடுத்திருக்கின்றன .
வெற்றியை நோக்கிச் செல்லும் பாதையில் தோல்விகள் எல்லாம்
இலக்கை எட்ட உதவும் வழிகாட்டிகள் .சோர்ந்து உட்காராமல்
நம்பிக்கையோடு துள்ளிச் சென்றால் இன்றில்லாவிட்டாலும் ஒருநாள்
இலக்கைச் சென்றடையலாம்

 
 
மனம் ஒரு குரங்கு





 
 


மனதின் ஒப்புமைக்கு குரங்கு ஏனின்று வந்தது

மண்டையைக் குடைந்தபோது பதிலொன்று மலர்ந்தது

சிறு பிள்ளையில் நான்

சின்னச் சின்ன சேட்டை

செய்து மகிழ்ந்த போது

சித்தி திட்டினால் என்னை

சுட்டிக் குரங்கு என்று

அடுத்த வீட்டுப் பையன்

அதிரசம் சாப்பிட்ட போது

ஆவலில் தட்டிப் பறிக்க

அவன் திட்டினான் என்னை

வன் குரங்கு என்று

பள்ளி செல்லும் வழியில்

தோப்பைத் தாண்டிக் குதித்து

மாங்காய் பறித்த போது

காவலன் திட்டினான் என்னை

வாலில்லாக் குரங்கு என்று

வகுப்பில் கணக்கைத்

தப்புத் தப்பாய் போட்ட போது

நண்பன் திட்டினான் என்னை

மக்குக் குரங்கு என்று

விடலைப் பருவம் எட்டிவிட்டேன்

விடவில்லை இந்த குரங்குப் பட்டம்

பரிணாம வளர்ச்சியில் உருவம் மாறிப்போனாலும்

பாரம்பரிய மனமின்னும் மாறவில்லை போலும்

மரம் விட்டு மரம் தாவுவதைப் போல

மனம் கண்டம் விட்டு கண்டம் தாவுது

கடலலை கரையைத் தழுவுவதைப் போல

ஆசைகள் நெஞ்சில் அலை மோதுது

நேசங்கள் இடம் மாறுது

நெடிலாகிய குரங்கு மனிதனாக உயர்ந்தது

குறிலான மனம் இன்னும் குரங்காகவே நின்றது

மனம் ஒரு குரங்கு என்றல் அது

ஆண் குரங்கா பெண் குரங்கா

என்ற எண்ணம் எட்டிப்பாக்கும்

மனம் ஒரு குரங்கு என்று

சொன்னாரிடம் நான் கேட்டேன்

அவர் சொன்னார் இதை

ஆணிடம் இருப்பது பெண் குரங்கு

பெண்ணிடம் இருப்பது ஆண் குரங்கு

அதனால் தான் கண்டார்கள்

ஆணுக்குள் ஒரு பெண்ணை

பெண்ணுக்குள் ஒரு ஆணை

No comments:

Post a Comment