எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
எல்லோரும் அவதாரக் கடவுள்கள்
குழந்தையாய்த் தவழ்ந்த போது
என்னைப் பற்றி
ஏதும் தெரியாதிருந்தேன் .
தெரியும் வயதை எட்டிய போது
என்னைப் பற்றி
சரியாய் அறியாதிருந்தேன்
பார்த்துக் கற்றும் படித்துக் கற்றும்
என்னைப் பற்றி
முழுதாய்த் தெளியாதிருந்தேன்
வளர்த்து கற்றும் வாழ்ந்து கற்றும்
நான் மெத்தப் படித்த
மேதாவி ஆனேன்
உலகம் தெரிந்தது உள்ளம் மறைந்தது
மனம் இன்னும்
அறிவிலியாகவே இருந்தது
வாழ்ந்து ஓய்ந்து உலகை விட்டுப்
பிரியும் போது
ஒன்றைப் புரிந்து கொண்டேன்
கடவுள் என்பது
காணும் வெளியில் இல்லை
ஒருவரின்
உள்மனமே கடவுளின்
உருவமில்லா அவதாரமென்று .
பிறக்கும் போதும்
இறக்கும் போதும்
கடவுளாய் இருக்கிறோம்
வாழும் போதும் கடவுளாய்
வாழ்ந்துவிட்டால்
உலகில் இனியொரு துயர்வர
வழியில்லை என்று .
No comments:
Post a Comment