விண்வெளி உலா-3
விண்ணியற்பியலும் தொலைவுகளுக்கான அலகுகளும்
விண்வெளியில் உலா போவதற்கு முன்னர் விண்ணியற்பியலில்
பயன்படுத்தப்படும் தொலைவிற்கான அலகு முறைகளைப் பற்றித்
தெரிந்து கொள்ளவேண்டும் .இவை அண்டத்தின் பரிமாணத்தைப்
பற்றியும் அண்டத்தின் சார்பு இருப்பிடம் மற்றும் தொலைவு
பற்றியும் இரு விண்ணுருப்புகளுக்கு இடைப்பட்ட தொலைவு
பற்றியும் அறிந்து கொள்ளப் பயன்தருகிறது.விண்வெளியில்
நெடுந்தொலைவுகளைக் குறிப்பிடச் சாதாரணமாக நாம்
பயன்படுத்தும் மீட்டர் ,கிலோமீட்டர் போன்ற அலகுகள்
அனுகூலமாக இருப்பதில்லை. ஏனெனில் கிலோமீட்டர் அலகு
முறையில் விண்வெளியில் ஒரு சிறிய தொலைவு
கூட 11 இலக்கங்களைக் கொண்டிருக்கும் . அதை எழுதுவதும்,
குறிப்பிட்டுச் சொல்வதும் சற்று கடினமாக இருக்கும் என்பதால்
வானவியலார் தனித்த அலகு முறைகளைப் பின்பற்றுகிறார்கள் .
வானவியல் அலகு (Astronomical Unit )
இது சூரியக் குடும்பத்திலுள்ள விண்ணுருப்புகளின் தொலைவைக்
குறிப்பிடப் பயனுள்ளதாக இருக்கிறது .பூமிக்கும் சூரியனுக்கும்
இடைப்பட்ட சராசரித் தொலைவு ஓரலகு வானவியல்
தொலைவாகும். இதை AU என்று சுருக்கமாகக் குறிப்பிடுவார்கள் .
1 வானவியல் அலகு = 1 .496 x 100000000 கி.மீ
இவ்வலகுத் திட்டத்தில் சூரியனின் விட்டம் ௦௦௦ 0௦௦.0093 AU . சூரியனுக்கும் சூரியக் குடும்பத்தின் முதலாவது கோளான புதனுக்கும் உள்ள
தொலைவு 0.387 AU .சூரியனுக்கும் இறுதிக் கோளான
நெப்டியூனுக்கும் உள்ள தொலைவு 30 AU .
ஒளியாண்டு (light year )
வானவியல் அலகு ,விண்மீன்களின் தொலைவைக் குறிப்பிடப் போதுமானதாக இல்லை .எடுத்துக்காட்டாக நமக்கு மிக
அருகிலுள்ள பிராக்சிமா சென்டாரி (proxima centauri ) என்ற விண்மீன்
260 ,000 AU தொலைவில் உள்ளது .அண்டத்தின் எல்லையோரத்தில் இருக்கும் ஒரு விண்மீனின் தொலைவு இதைப்போல பல
மில்லியன் மடங்கு .அதனால் ஒளியாண்டு என்ற புதிய அளவைக் கற்பித்தனர் .இவ்வலகு முறையால் விண்வெளியில் நெடுந்தொலைவுகளை எளிதாகக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும் . ஒளியாண்டு என்பது வெற்றிட வெளியில் ஒளி ஓராண்டில் கடந்து செல்லக்கூடிய தொலைவாகும் . ஒளி ,வெற்றிடத்தில் வினாடிக்கு
மூன்றுஇலட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்கிறது
என்பதால் ஓராண்டில் ஒளி கடக்கும் தொலைவு 946700 கோடி கிமீ
அல்லது 63300 AU விற்குச் சமம் .ஒளியாண்டு போல ,
ஒளி நிமிடம், ஒளி வினாடி போன்ற சிறிய துணை அலகுகளும்
அரிதாகப் பயன்படுத்தப்படுவதுண்டு .நெடுந்தொலைவுகளிலுள்ள
விண்மீன்களை அவை உமிழும் ஒளியைக் கொண்டே
காண்கிறோம் . சூரிய ஒளி பூமியை அடைய ஏறக்குறைய
எட்டேகால் நிமிடம் எடுத்துக் கொள்கிறது .அதாவது
ஒளி ஆண்டுக் கணக்கில் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட
தொலைவு 0.0000157 ஒளியாண்டுகள். சூரியனுக்கு
அருகிலுள்ள பிராக்சிமா சென்டாரி என்ற விண்மீன் 4 .27
ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. நாம் ஒளியின் வேகத்தில் தொடர்ந்து சென்றால் கூட ,அந்த விண்மீனைச் சென்றடைய
4 .27 ஆண்டுகளாகும் .நாம் எட்டக்கூடிய உயர்ந்தபட்ச வேகம்
என்பது வினாடிக்கு 10 -20 மீட் டர்களே. எனவே நாம் சூரியக்
குடும்பத்தை விட்டு வெளியே சென்று மற்றொரு குடும்பத்தை
அடைவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது.
பிராக்சிமா சென்டாரி உமிழும் ஒளி இடைத்தொலைவைக் கடந்து
நம்மை 4 .27 ஆண்டுகளில் அடைகிறது .அந்த விண்மீன்
இப்பொழுது எப்படி இருக்கிறது என்பதை அறிய இன்னும்
4 .27 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் .விண்வெளியில்
முழுக் காட்சியை நாம் ஒரே நேரத்தில் கண்ணுற்றாலும்
ஒவ்வொரு விண்மீனும் வெவ்வேறு காலங்களில் இருந்த
நிலையைத்தான் பார்க்கிறோம் என்பது நாம் தெரிந்து கொள்ள
வேண்டிய ஒர் உண்மையாகும் கிலோ ஒளியாண்டு ,மெகா
ஒளியாண்டு என்று ஒளியாண்டுக்கு உயரளவுத் துணை அலகுகள் இல்லை..
பார்செக் (Parsec )
தொலைவிலுள்ள அண்டங்கள் ,வெவ்வேறு அண்டங்களிலுள்ள
முக்கிய விண்மீன்கள்.விண்மீன் தொகுதிகளின் தொலைவைக்
குறிப்பிட பர்செக் என்றொரு அலகு இன்றைக்கு
விண்ணியற்பியலார் பயன்படுத்துகிறார்கள் . கோணத்தை
டிகிரியால் அளவிடுவார்கள் .ஒரு வட்ட்டம் அதன் மையத்தில்
360 டிகிரியைக் கொண்டிருக்கும். ஒரு டிகிரியை 60 சம
பிரிவுகளாக்கி அதை மினிட் (Minute ) என்றும்,ஒரு மினிட்டை
60 சம பிரிவுகளாக்கி அதை செகண்டு என்றும்
குறிப்பிடுவார்கள் .சூரியனை பூமி சுற்றும் வட்டப் பாதையில் இரு
விட்ட முனைகளிலிருந்து கொண்டு விண்மீன்களை நோக்க ,எந்த விண்மீன் தனது தோற்றக் கோணப் பெயர்ச்சியை (Parallax ) இரண்டு செகண்டுகளாகக் காட்டுகிறதோ அதன் தொலைவே பார்செக் ஆகும்
.பாரலாக்ஸ் ,செகண்டு என்ற சொற்களின் இணைப்பால்
உருவான கலைச் சொல்லே பார்செக் ஆகும் .
பிராக்சிமா செண்டாரி யின் இடமாறு தோற்றக் கோணம் 0 .76 செகண்டுகள் .ஆகவே அதன் தொலைவு 1 .31 பார்செக் என்றும்
அல்லது 4 .27 ஒளி ஆண்டுகள் என்றும் கூறலாம்.
ஒரு பார்செக் என்பது 3 .26 ஒளி ஆண்டுகள் அல்லது
3 .08 x 10000000000000 கி.மீ. (30 .8 இலட்சம் கோடி கிலோமீட்டர் ) .
வானவியல் அலகோடு ஒப்பிடும்போது இது 206 .265 AU ஆகும்.
விரிவடையும் விண்ணியற்பியலுக்கு பார்செச்கை விடவும் பெரிய அலகுகள் தேவையாய் இருக்கின்றன. அதனால்
கிலோ பார்செக் (1000 பார்செக் ) மெகா பார்செக்(1000000 பார்செக் )
போன்ற துணை அலகுகளையும் கையாளுகிறார்கள் .
No comments:
Post a Comment