Thursday, October 28, 2010

சாமுவேல் ஜான்சன்


உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மறக்க முடியாத ,
மறக்கக் கூடாத ஒரு மனிதன் என்று சொன்னால் அது சாமுவேல் ஜான்சன் தான். இங்கிலாந்து நாட்டில் 1709 - 1784 ல் வாழ்ந்த
ஓர் எழுத்தாளர், இலக்கியவாதி .

இவருடைய நெடிய உயரத்தையும், கனத்த உருவத்தையும்
முதன் முதலாகப் பார்ப்பவர்கள் அவரைப் பற்றித் தவறாகவே நினைப்பார்கள் .ஜான்சன் சிறுவனாக இருக்கும் போதே
அவருடைய கெட்டிக்காரத்தனம் வெளிப்பட்டுத் தோன்றியது.
படிப்பில் இவர்தான் வகுப்பில் நம்பர் ஒன்.
எவர் தனது படிப்பை மக்களுக்குப் பயன்படுமாறு வெளிப்படுத்த வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களே
உலகில் சிறந்தவர்களாகிறார்கள்.அதற்கு ஒரு நல்ல
உதாரணம் சாமுவேல் ஜான்சன்.நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக நேரத்தை வீணாக்கி விடவில்லை ,
எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டார் .

அவருடைய தந்தை ஒரு புத்தக விற்பனையாளர் . போதிய வருமானமின்றி வறுமையில் வாடிய குடும்பத்தின் துயரைப் போக்க புத்தகங்களை 'பைண்டிங்' செய்து சம்பாதித்து
தந்தைக்கு உதவியாய் இருந்தார் . அப்போது நிறைய பழைய புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அவர்க்குக் கிட்டியது .
அது அவருடைய ஆங்கில அறிவை வளர்க்க பேருதவியாய்
இருந்தது . சிலர் பட்டம் பெற்ற பின் தங்கள் திறமைகளை
வெளிப்படுத்தி தான் அந்தப் பட்டத்திற்கு தகுதியானவன்
என்று உறுதி செய்வார்கள் . வேறு சிலர் தங்கள்
புலமையைக் காட்டிய பின்னர் அதற்கு மரியாதையாக
பட்டங்கள் தானாக வந்து சேரும். இதில் ஜான்சன் இரண்டாம்
வகை.9 ஆண்டுகள் கடிய உழைப்பிற்கு பின் 1755 ல் முதன்
முதலாக ஆங்கில அகராதியை இவர் வெளியிட்டார் . அகராதியை வெளியிடுவதற்கு முன்னர் இவர் ஒரு இளநிலைப்
பட்டதாரி .வெளியிட்ட பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
இவருக்கு முதுநிலைப் பட்டமும், கௌரவ டாக்டர் பட்டமும்
கொடுத்தது. .


********************

சந்திப்போமா ? எப்போது ,எப்படி ?
ஒரு நீர் தேக்கத்தில் ஒத்த இரு படகுகள் அருகருகே
இருக்கின்றன . அப் படகில் ஒன்றில் ஓர் ஆணும் மற்றொன்றில் காதலியான பெண்ணும் ஜாலியாகப் பயணம் செய்துகொண்டிருக்கின்றனர் .காதலர்கள் ஒருவரை
ஒருவர் பார்த்துக்கொண்டு ஒரு கயிற்றின் இருமுனையை
விறைப்பாகப் பிடித்துக்கொண்டு ஒருவர் மற்றவரை அருகே வர இழுக்கிறார்கள் .காதலன் காதலியை அல்லது
காதலி காதலனை அல்லது இருவரும் ஒருவரை ஒருவர்
கயிற்றால் இழுத்தால் என்ன நிகழும் ?
                                        *****************
இரு படகுகளும் காதலர்களால் தனித் தனியே
இழுக்கப்பட்டாலும் அல்லது இருவரும் சேர்ந்து
இழுத்தாலும் எப்போதும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே
சந்திக்கின்றன .அவ்விடம் அவ்விரு படகுகளின்
(காதலர்களுடன் கூடிய) தொகு
நிறை மையமாகும் (centre of mass ) .ஒருவர் மற்றவர் படகை
இழுக்க அதே விசையால் தன் படகை முன்னுக்குத்
தள்ளுகிறார் .இயக்க விசை, அமைப்பில் ஓர் அகவிசையாக
இருப்பதால் அமைப்பின் உந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது .நிறை மையத்தை நோக்கி இரு படகுகளும்
சம உந்ததில் சென்றால் தான் அமைப்பின்
தொடக்க நிலை உந்தமான சுழியை ஈடு செய்ய முடியும் .
எனினும் இழுவிசை வேறுபாடுகள் காரணமாக ,தனித்து இழுக்கும் போதும் ,இணைந்து இழுக்கும் போதும் நிறை மையத்தைச் சந்திப்பதற்காகப் படகுகள் எடுத்துக் கொள்ளும்
காலம் மாறுபட்டதாக இருக்கும் .

No comments:

Post a Comment