Tuesday, October 12, 2010

Eluthatha Kaditham-14

எழுதாத கடிதம்





மகா கனம் பொருந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்களே
நாளிதழ்களில் இப்பொழுதெல்லாம் கொலை கொள்ளை ,
கற்பழிப்பு போன்ற குற்றங்களைப் பற்றியே அதிகச்
செய்திகள் வெளி வருகின்றன .இதைச் செய்யாமல்
இருப்பது மக்கள் வாழ்க்கை முறை .செய்துவிட்டால்
அதைக் கட்டுப்படுத்துவது அரசியல் மற்றும் நீதி
நிர்வாகத்தின் கடமை .எல்லோரும் கூட்டாக இணைந்து
வாழ்வது சமுதாய வாழ்க்கை .அப்படிப்பட்ட வாழ்க்கை
என்றும் இனிதே தொடர இந்தச் சமுதாயம் உங்களைத்
தேர்வு செய்து அரசையும் ,நீதி மன்றத்தையும்
ஒப்படைத்துள்ளது .

இலஞ்சம் எங்கும் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக
அத் தவற்றை அனுமதிக்கலாமா? சாதாரண மங்கள் மட்டுமே
இத் தவற்றைச் செய்வார்களேயானால் இதை அரசு
மற்றும் நீதி மன்ற அமைப்புகள் எளிதில்
கட்டுப்படுத்தியிருக்கும். ஆனால் கொள்ளை நோய்
போல அலுவலர்களையும் உயர் அதிகாரிகளையும் ,
அரசியல் தலைவர்களையும் ஆட்கொண்டுள்ளதால்
இதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று கருத்து
சொல்வதற்கே தயக்கமாக இருக்கிறது .இலஞ்சத்தை
நம்முடைய அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பால்
ஒழித்துக் கட்ட முடியவில்லை என்பதை பகிரங்கமாக
ஒப்புக்கொண்டு அதை நியாயப் படுத்தும் விதமாக ,
இலஞ்சம் பெறுவதை அனுமதித்துவிடலாம்
என்று தாங்கள் கருத்து தெரிவித்திருப்பதாகச்
செய்திகள் வெளிவந்தன .
உலகில் எந்த நாட்டிலுள்ள நீதி மன்றங்களும்
சொல்லாத ஒரு கருத்தை இந்திய நீதி மன்றம் சொல்லி
இருக்கிறது என்பதால் இந்தியாவிற்கு உலக அரங்கில்
இன்னும் பெருமை கூடப்போகிறது . இலஞ்சம்
வாங்குகிறவர்கள் இன்னும் அதிகமாக வாங்கத் துணிவு
கொள்வார்கள் . அப்புறம் அதையும் நியாயப்
படுத்தவேண்டி வரும் .சட்டப்படி ஒரு இலஞ்சம், அப்புறம்
வழக்கமான இலஞ்சம் என்று பல பிரிவுகள் தோன்றும் .
இலஞ்சம் நல்லவர்களையும் தீயவர்களாக மாறத் தூண்டும்
ஒரு வலுவான காரணி .பாதிக்கப்படுபவர்கள் கிளர்சியுராமல்
இருக்கும் வரை அதன் உண்மையான பாதிப்பு தெரிவதில்லை.
இப்போக்கு வளரும் போது நிலைப்படுகிறது .
நிலைப்பட்டபிறகு அதைக் கட்டுக்குள் கொண்டுவருதல்
என்பது மிகவும் கடினம் .
பெரும்பாலனவர்கள் ஒரு தவற்றைச் செய்கிறார்கள்
என்பதற்காக அதை ஒருபோதும் அனுமதித்துவிடமுடியது .
பெரும்பாலான மாணவர்கள் படிக்காமலேயே பாஸ்
செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதற்காக
எல்லோரையும் ஒட்டு மொத்தமாக பாஸ் போட்டுவிடலாமா ? பெரும்பாலான அலுவலர்கள் தங்கள் பணி நேரத்தில்
அரட்டை ,காப்பி குடித்தல் ,புகை பிடித்தல்
போன்று பாதி நேரத்தை கழிக்க விரும்புகிறார்கள்
என்பதற்காக பணி நேரத்தைப் பாதியாகக் குறைத்து
விடலாமா ?

இது நீதிபதிகள் மட்டும் முடிவு செய்யவேண்டிய விசயமில்லை .
இந்தியாவை உண்மையாக நேசிக்கின்ற இந்திய மக்களுக்கும்
சம்பந்தம் உண்டு .

இந்திய சமுதாயமே யோசிக்க வேண்டுகிறேன் .

அன்புடன்

காவேரி

1 comment: