Friday, May 31, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 
சின்ன வெங்காயம் ரூ .70-80 க்கும் ,தக்காளி ரூ .40-50 க்கும் இவ்வாரச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது .காய்கறி வாங்குவதற்கே பணத்தை அள்ளிக் கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

ஒரு வழியில் கூடுதல் செலவு வந்தால் வேறொரு வகையில் செலவைக் குறைத்துக் கொள்வது முன்பு  நிலையான மாத வருவாய் உள்ளவர்களின் உத்தியாக இருந்தது. கூடுதல் செலவு வரும்போதெல்லாம் ஏதாவது  ஒன்றைக் குறைத்து பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.இன்றைக்கு நிலைமை அப்படியில்லை.எல்லாமே தலைக்கு மேலே போய்விட்டது.காய்கறி விலை உயர்வு,அரிசி,பருப்பு விலை உயர்வு,உணவுப் பண்டங்கள் விலை உயர்வு,பால் விலை உயர்வு, பெட்ரோல் ,டீசல் ,எரிவாயு விலை உயர்வு,மின்சாரம்,டெலிபோன்,இரயில் மற்றும் பஸ் கட்டண உயர்வு ,கூலி உயர்வு ,வரி உயர்வு இப்படிப் பல உயர்வுகளைச் சமாளிக்க பெரும்பாலான நடுத்தர மக்கள் திணறுகின்றார்கள் .வாழ்க்கைப் போராட்டத்தில் உயிருடன் வாழவேண்டிய கட்டாயத்தில் இன்றைக்கு இவர்கள் குறுக்கு வழிகளை நாடத் துணிவு கொண்டு வருகின்றார்கள் .இலஞ்சம் வாங்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர்கள் கூட இப்போது அதற்கு ஆதரவாய்ப் பேச ஆரம்பித்திருக்கிக்ன்றார்கள்.விலை வாசி உயர்வும்,வேலை வாய்ப்பின்மையும் இலஞ்சத்தைத் தூண்டுகின்றன என்பது உள்ளார்ந்த ஓர் உண்மை.இலஞ்சத்தை ஒழிப்பது இருக்கட்டும் அதன் இனப்பெருக்கத்தையாவது  கட்டுப்படுத்த வேண்டாமா?

No comments:

Post a Comment