Monday, April 15, 2013

Micro aspects of developing inherent potentials


Micro aspects of developing inherent potentials

“பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை நம்பாதே” என்றொரு சினிமாப் பாடல் .எல்லோரையும் போல நானும் முணுமுணுத்திருக்கின்றேன் .இது புற அழகை மட்டும் ரசிக்கும் கண்களுக்குச் சொல்லப்படும் அறிவுரை.  பெண்களை நம்பாவிட்டால் உலகம் இந்த அளவிற்கு பல்கிப் பெருகிப் போயிருக்காது என்பதால் இதில் எதோ உட்பொருள் இருக்கவேண்டும் என்றுதான் தோன்றுகின்றது.

பெண்களை நம்பாதே என்று சொன்ன சமுதாயம் தான் 'ஒவ்வொரு வெற்றிபெற்ற மனிதனுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் 'என்று ஆணித்தரமாகச் சொல்கிறது .பெரும்பாலும் இந்தப் பெண் ஒருவருடைய வாழ்கையில் மனைவியாகத்தான் இருக்கமுடியும் .திருமணத்திற்கு முன் இளம் வயதில் வெகு சிலருக்கு காதலியாகக் கூட இருந்திருக்கலாம் .

கணவருடைய சிந்தனைகளிலும் செயல் திட்டங்களிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவருடைய முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்கின்ற மனைவிமார்கள் இன்றைய வாழ்க்கைச் சூழலில் குறைவு .கணவரின் கட்டாயத்திற்காக அல்லது ஒன்றை எதிர்பார்த்து அதைப் பெறுவதற்காக சிலர் ஒப்புக்காக துணை புரிவதுண்டு.பல மனைவிமார்கள் கணவனுடைய வேலைகளில் ஈடுபட நேரம் ஒதுக்க நேரம் கிடைப்பதில்லை.மேலும் கணவன்மார்கள் தங்களுடைய குடும்ப வேலைகளில் உதவிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

உண்மையில் இந்த மூன்று நிலைகளிலுமே மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு ஏதோ ஒரு வழியில் துணை புரிந்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.எப்படியிருந்தாலும் தப்பில்லை என்பதினால்தான் ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கின்றாள் என்று பொன்மொழிப் புதிரொன்றை விட்டுச் சென்றார்கள் போலும் .மனைவி துணைநின்றால் வெற்றி.அப்படிஇல்லாவிட்டாலும் வெற்றிதான் .மனைவி ஒதுங்கியிருக்கும் போது தேவையில்லாத குறுக்கீடுகள்,கால விரயம் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்படுகின்றது . இவையாவும் வெற்றிக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகள்.அவை தானாகவே அகற்றப்படுவதால் வெற்றிப் பாதையில் முன்னேறிச் செல்வது எளிதாகின்றது .

அழகான பெண்ணென்றால் யாருக்குத்தான் அவளை அடைய ஆசை வராது .ஆண்டிமுதல் அரசன்வரை,இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் உள்ளுக்குள்ளே இந்த ஆசை செய்யும் சேட்டைகளை யாரறிவார்.இதில் வேடிக்கை என்னவென்றால் திருமணமானவர்களும் ,பல மனைவிமார்களைக் கொண்டவர்களும் இந்தப்பட்டியலில் முன்னிலையில் இருக்கின்றார்கள். இவர்களுக்கு தங்களுடைய எண்ணம் தவறானது என்று அவர்களுக்காகவும் தெரியாது பிறர் சொன்னாலும் புரியாது. ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன் அவளைத் தன்னுடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.வைத்த கண் விலகாமல் பார்ப்பார்கள், போகுமிடமெல்லாம் பின்சுற்றுவார்கள் . தேவையில்லாமல் தங்களை அழகு படுத்திக் கொள்வார்கள், அதிகம் செலவு செய்வார்கள் ,தற் பெருமை பேசுவார்கள்,.போட்டியிருந்தால் சண்டை .சிலர் ஒதுங்கிக் கொள்வார்கள் ,சிலர் வேறுவழியின்றி விலகிக் கொள்வார்கள் .சிலர் தனக்குக்கிடைக் காதது மற்றவனுக்கும் கிடைக்கக் கூடாது என்று கெடுதல்செய்வார்கள் . அழகுப் பெண்ணை அடைவதற்கு தன்னுடைய மெய்யான தகுதியால் எவனொருவன் தொடர்ந்து அவளைக் கொள்வதற்கு முயல்கின்றானோ அவனே அவளை அடையும் வாய்ப்புக்கு தகுதியுள்ளவனாகின்றான் . ஒருவருடைய வெற்றி என்பதும் இந்த அழகுப் பெண்ணை அடைவதைப் போன்றதே .

ஒரு சாதனையைச் செய்யப்போகின்றேன் என்று யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம்.சிலர் முடியாது என்று இடையில் விட்டுவிடுவார்கள் .சிலர் அதன் கடுமையில் சோர்ந்து இது தங்கள் தகுத்திக்கு மீறிய செயல் என்பதைக் காலங் கடந்து புரிந்து கொண்டு விலகிச்செல்வார்கள்.ஒரு சிலர் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்வதற்காகவே இது நாள் வரை தகுதிகளை வளர்த்துக் கொண்டுள்ளேன் என்று அர்பணிப்புடன் ஈடுபடுவார்கள் . அவர்களால் மட்டுமே சாதிக்க முடியும்.

No comments:

Post a Comment