Monday, April 1, 2013

Mind without fear


Mind Without Fear

ஒரு செயலைத் தொடங்கு முன் மனதில் இனம்புரியாத ஒருவிதமான பயம் தோன்றுவதற்கு அடிப்படையான காரணம் அச் செயலைச் செய்யத் தொடங்கி வெற்றிகரமாக முடிக்கும் வரை நமக்கு நாமே முழு நம்பிக்கை உடையவர்களாக இருப்பதில்லை .குறைந்தபச்ச தகுதிகளையும் திறமைகளையும் கொண்டு அதிகபச்ச அனுகூலங்களை அடைய ஆசைப்படும் போது உள்ளுக்குள்ளே ஊறும் இந்த அவநம்பிக்கை பயத்தின் அளவை அதிகரிக்கின்றது. சிறு குழந்தையாக இருந்த போது செயல் மற்றும் திறமை பற்றிய எந்த எண்ணமும் தோன்றி இல்லாததாலும், தனக்கு வேண்டியதையெல்லாம் தருவதற்குத் தன் பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை இருந்ததாலும் பயம் இல்லாதிருந்தது .கொஞ்சம் வளர்ந்த போது பெற்றோர்களின் தனிக் கவனிப்புக் குறைந்து தனக்கு வேண்டியதைப் பெறத் தானே வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ,திறமை போதிய அளவு இல்லாத நிலையில் பயம் மனதைச் சூழ்ந்துகொள்கின்றது.

ஒரு செயலைச் செய்யப் புகுமுன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன முதலாவது செயலைச் செய்யவேண்டியதன் அவசியம் ,விளை பயன் ,பயனுறு திறன் போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் தேவையின்றி ஒரு வேலையில் ஈடுபடுவது கால விரயமாகும்.பயனுறு திறனை வெகுவாகத் தாழ்த்திவிடும். இரண்டாவது அதைச் செய்து முடிப்பதற்கு வேண்டிய தகுதிகளைப் பெற முயலவேண்டும்.வழிமுறைகள் மற்றும் கால வரம்பு முக்கியமானது .காலங் கடந்து ஒரு செயலை முடிப்பது நற்பயன் அளிப்பதில்லை .செயல்களைச் செய்வதற்கு நம்மிடம் இருக்கும் பலம் மற்றும் பலவீனங்களை அவ்வப்போது மதிப்பீடு செய்து தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். செயலைச் செய்து முடிப்பதற்கு முழுத் தகுதி யுடையவர்களாய் இருக்கும்போது அவநம்பிக்கையும் இருப்பதில்லை மனதில் பயமும் இருப்பதில்லை

No comments:

Post a Comment