Saturday, April 13, 2013

Short story


சிறுகதை

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் .அவன் வீரனாகவும் வல்லவனாகவும் இருந்ததால் பல சிற்றரசர்களை வென்று நாட்டை விரிவுபடுத்திக் கொண்டான். வெற்றி மேல் வெற்றி கிடைத்ததால் மேலும் மேலும் போரில் ஈடுபட்டான் .எதிர்பாராதவிதமாக ஒருமுறை தோற்றுப் போனான் .மிகுந்த மன வருத்தத்துடன் நாடு திரும்பும் வழியில் ஒரு மாமுனிவரைச் சந்தித்தான் .எதிரி மன்னன் என்னளவு வீரனுமில்லை அவனிடம் போதிய படை பலமும் இல்லை,இருந்தும் தான் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அவரிடம் புலம்பினான். அதற்கு அந்தமுனிவர் சொன்னார் ' ஒரு திறமைசாலி மேலும் மேலும் தன் திறமையை வளர்த்துக் கொள்ளும் போது இடையிடையே சோதனைகள் வரவே செய்யும். நல்ல திறமைகளை மேம்படுத்தி தீய திறமைகளை மட்டுப்படுத்த இறைவன் இரண்டு காரணங்களுக்காக இதை மாற்றமின்றிச் செய்து வருகின்றார். முதலாவது வளரும் திறமை தொடர்ந்து பிறருக்கு நன்மை பயக்குமாறு இருக்கவேண்டும் என்பதற்காக திசை மாறிப்போகவிருக்கும் மனதிற்கு சில சோதனைகள் . இரண்டாவது தன்னிகரில்லாத் திறமையைப் பெற்ற பின் தன்னை வெல்ல யாருமில்லை என்றெண்ணி அவனே ஒருகாலகட்டத்தில் கொடியவனாக நிலை மாறலாம்.அப்போது சமுதாயம் பாதுகாப்பின்றி சீரழிந்துவிடும் என்பதற்காகச் சில சோதனைகள்.நம் புராணங்களில் இப்படித்தான் அசுரர்கள் வளர்ந்தார்கள் .அவர்களை ஒடுக்க தேவர்களாலும் முடியவில்லை, இறைவனின் பல அவதாரங்கள் வேண்டி யிருந்தது 'என்று சொல்லிமுடித்தார் .

உண்மை நெறிகளை உணர்ந்துகொண்ட அரசன் தன் நாட்டின் எல்லையை விரிவு படுத்தும் முயற்சியைக் கைவிட்டதோடு ,தான் ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளையும் குறுநில மன்னர்களிடமே கொடுத்தான் .அண்டை நாடுகளுடன் நட்பு இருந்ததால் ஆட்சியைத் திறம்படச் செய்யமுடிந்தது.எப்பொழுது கிடைத்ததை யெல்லாம் கொடுத்துவிடவேண்டும் என்ற நினைக்க ஆரம்பித்தானோ அப்பொழுதிலிருந்தே அரசனின் புகழ் விண்ணை எட்டியது.

No comments:

Post a Comment