Friday, April 12, 2013

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -ருபிடியம் -கண்டுபிடிப்பு

நிறமாலை மூலம் இனமறியப்பட்ட தனிமங்களுள் இதுவும் ஒன்று .லிலாக் (lilac) செடியின் இளஞ் சிவப்பு நிறப் பூவின் நிறத்தைக் கொண்ட ஒரு கனிமம் லிபிடோலைட் (lipidolite or lilalite).ஜெர்மன் நாட்டின் கலாப் ரோத் 1797 ல் இக்கனிமத்தை வேதியியல் பகுப்பாய்விற்கு உட்படுத்தி ஆராய்ந்தார்.எவ்வளவு முறை சோதனை மேற்கொண்டாலும் 2.5 % இழப்பு இருந்தது.இது கனிமத்தில் இருந்த நீரால் ஏற்பட்ட இழப்பு என்று கலாப் ரோத் தவறுதலாக முடிவு செய்தார்.

1861 ல் ஜெர்மன் நாட்டு வேதியிலாரான புன்சன் மற்றும் கிர்ச்சாப் லிபிடோலைட்டை பண்டுவப்படுத்தி ,நிறமாலை மூலம் ஆய்வு செய்தனர் .அதன் மூலம் அக்கனிமத்தில் ஒரு புதிய கார உலோகம் இருப்பதை உறுதிசெய்தனர் .நிறமாலை அப்புதிய உலோகம் கருஞ் சிவப்பு நிறத்தைக் கொண்டிருந்ததால் அதற்கு ருபிடியம் எனப் பெயரிட்டனர் .லத்தீன் மொழியில் ருபிடியஸ் என்றால் அழுத்தமான சிவப்பு என்று பொருள் .

இது பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் தனிமங்களின் செழுமை வரிசையில் 16 ஆம் இடத்தில் உள்ளது .லிபிடோலைட்டில் 1.5 % ருபிடியம் கிடைக்கின்றது. சீசியத்து டன் சேர்ந்து போலுசைட் ( Pollucite) என்ற கணிமமாகக் காணப்படு கின்றது .ருபிடியம் குளோரைடை கால்சியம் கொண்டு ஆக்சிஜநீக்க வினைக்கு உள்ளாக்கி உலோக ருபிடியத்தைப் பெறலாம் .

பண்புகள்

Rb என்ற வேதியியல் குறியீட்டுடன் கூடிய ருபிடியத் தின் அணுவெண் 37 ,அணு நிறை 85.4678.அடர்த்தி 1532 கிகி/கமீ .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 313 K ,983 K ஆகும் . கொண்டிருந்ததால் அதற்கு ருபிடியம் எனப் பெயரிட்டனர் .லத்தீன் மொழியில் ருபிடியஸ் என்றால் அழுத்தமான சிவப்பு என்று பொருள் .

இது பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் தனிமங்களின் செழுமை வரிசையில் 16 ஆம் இடத்தில் உள்ளது .லிபிடோ லைட் டில் 1.5 % ருபிடியம் கிடைக்கின்றது. சீசியத்து டன் சேர்ந்து போலுசைட் ( Pollucite) என்ற கணிமமாகக் காணப்படு கின்றது .ருபிடியம் குளோரைடை கால்சியம் கொண்டு ஆக்சிஜநீக்க வினைக்கு உள்ளாக்கி உலோக ருபிடியத்தைப் பெறலாம் .

Rb என்ற வேதியியல் குறியீட்டுடன் கூடிய ருபிடியத்தின் அணுவெண் 37. அணு நிறை 85.4678,அடர்த்தி 1532 கிகி/கமீ .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 312K,983K ஆகும்.

ருபிடியம் அறைவெப்பநிலையில் நீர்மமாக இருக்கமுடியும் .இது மென்மையான ,வெள்ளி போன்று தோற்றப் பொலிவு கொண்ட ஒரு கார உலோகம் .கார உலோகங்களுள் நேர் மின் அயனித் தன்மை (electropositive ) அதிகங் கொண்ட இரண்டாவது உலோகம் இது.இது காற்று வெளியில் சுயமாகப் பற்றிக்கொண்டு எரிகிறது .நீருடன் தீவிரமாக வினைபுரிந்து தீப்பற்றிக் கொண்டு ஹைட்ரஜனை வெளியேற்றுகின்றது .அதனால் இதை மண்ணெண்னைக்குள் முக்கி வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது .வெற்றிட வெளியில் அல்லது மந்த வளிம வெளியில் இதைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம் .நெருப்பின் சுவாலையில் இது மஞ்சள் கலந்த நீல நிறம் கொடுக்கின்றது .பிற கார உலோகங்களைப் போல பாதரசத்துடன் அமால்கம் ஏற்படுத்துகின்றது .தங்கம்,சீசியம்,சோடியம்,பொட்டாசியத்துடன் கலப்பு உலோகம் தருகின்றது .

இயற்கையில் கிடைக்கும் ருபிடியத்தில் நிறை எண் 85,87 கொண்ட இரு அணு எண்மங்கள் மட்டும் உள்ளன.இதில் ருபிடியம் -87 ன் செழுமை 27.85 % .இது நிலையற்ற தனமையால் அதி வேக எலெக்ட்ரான் களை (பீட்டா கதிர்) உமிழ்கின்றது .இதன் அரை வாழ்வு 5 x 10 11 ஆண்டுகள்.இதனால் சாதாரண ருபிடியம் 30-60 நாட்களில் ஒரு ஒளிப்பதிவுத் தாளை முழுமையாக ப் பாதித்து விடுகின்றது.

பயன்கள்

ருபிடியத்தை மிக எளிதாக அயனியாக்க முடியும் என்பதால் விண்வெளிக் கலன்களில் அயனி என்ஜின்களில் (Ion Engines) பயன்படுத்துகின்றார்கள் .எனினும் சீசியம் இதைவிட அனுகூலமிக்கதாக இருக்கின்றது .காந்தப்புலத்தில் அயனிகளின் பாய்மத்தால் (Magneto hydrodynamics) மின் உற்பத்தி முறையில் ருபிடிய அயனிகள் பயன்படுகின்றன .இதில் ருபிடிய அயனிகளை உயர் வெப்பநிலையால் பெற்றுப் பயன்படுத்துகின்றார்கள் .ருபிடியம் வெற்றிட எலெக்ட்ரான் குழாய்கள் ,மற்றும் ஒளி மின் கலன்களில் பயன்தருகிறது .சிறப்புப் பயன்களுக்கான கண்ணாடிகளில் இது சேர்க்கப்படுகின்றது .ருபிடியம் சில்வர்அயோடைடு (RbAg4I5) ஒரு அயனிப் படிகம் .அறைவெப்பநிலையில் மிக அதிக அளவிலான மின் கடத்து திறனைப் பெற்றுள்ளது .20 டிகிரி C வெப்பநிலையில் இதன் கடத்து திறன் நீர்த்த கந்தக அமிலம் பெற்றிருப்பதைப் போல உள்ளது .இது மென் படலங்களில் (Thin film) பயன் தருகின்றது

No comments:

Post a Comment