Wednesday, August 14, 2013

Creative thoughts

Creative thoughts

மனிதர்கள் கருவிகளை இயக்கி இயக்கி ஏறக்குறைய அவர்களும் ஒரு கருவி போல ஆகிவிட்டார்கள் .எளிதாகவும்,விரைவாகவும் வேலையை முடிக்க வேண்டும் என்று விரும்பி சிந்திக்கும் திறனையும் விவேகத்தையும் இழந்து வருகின்றார்கள் .

மனிதன் தன்னைப் போல வேலை செய்யக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்கிவிடலாம் .அது அவனைக் காட்டிலும் விரைவாகவும் ,அதிகமாகவும் வேலை செய்யலாம் .ஆனால் அவை ஒருபோதும் மனிதனுக்கு ஈடாகாது.அவை மனிதர்களுக்குக் கிடைத்த பலசாலியான அடிமைகள் .

ஓர் இயந்திரம் 100 தொழிலாளிகளின் வேலை மொத்தத்தையும் செய்யலாம்.ஆனால் எந்தவொரு இயந்திரமும் ஒரு அசாதாரண மனிதனின் வேலையைச் செய்ய முடிவதில்லை.ஒரு அசாதாரண மனிதனைப் போல வேலை செய்யக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்க மனிதர்கள் முயன்று வருகின்றார்கள்.அது அசாதாரண மனிதர்களின் சாதனையாகவும் சாதாரண மனிதர்களின் விருப்பமாகவும் இருக்கின்றது.

ஒன்றுமே சரியில்லாத போது ,எது தவறு என்று கேள்விக்குப் பதில் சொல்வது மிகவும் கடினம் .சான்றோர்கள் மேலும் மேலும் மௌனமாகி வருகின்றார்கள் என்றால் அதர்க்குக் காரணம் இதுவே .குட்டையைக் கலக்கி விட்டு மீன் பிடிக்க நினைப்பவர்களே எதையாவது இலக்கணம் மின்றி இயல்பு மீறி பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்.


ஒருவருக்கு வரும் துன்பம் ஒருபோதும் அவனால் வருவதில்லை .பெரும்பன்மை அவனது உடைமையால் வருகின்றது .உடைமையாகப் பொருளேதும் இல்லையென்றால் அவனைத் துன்பம் சூழ்வதில்லை .இனிப்பிருக்குமிடம் தேடி எறும்புகள் வருவதைப்ப போல உடைமையாகப் பொருள் இருக்கும் இடம் நோக்கி துன்பம் படரும் .

No comments:

Post a Comment