Monday, August 5, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம்

நிதி திரட்டி ,சேர்த்த அந்த நிதியைத் தேவையில்லாத வழிகளில் செலவழிக்க வேண்டுமென்று ஏதேதோ திட்டங்கள் தீட்டி 10 சதவீதப் பயனுறு திறனுடன் செயல்படுத்துகின்ற இந்திய அரசு சேவை வரியை விரிவுபடுத்தி வருகிறது.. மனிதர்களின் ஆசைக்கு அளவு இருந்தாலும் இருக்கும்,இந்திய அரசுக்கு சேவை வரி விதிக்க அளவேயில்லை .திட்டம் இருக்கிறதோ இல்லையோ வரியால் நிதி இருக்கவேண்டும் என்று இனிமேல் உருவாகப் போகின்ற இல்லாத திட்டங்களுக்கு நிதி திரட்டுகின்றார்கள்..
பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சேவை வரி என்றால் பிள்ளைகளுக்கு கல்வி அளிக்கவேண்டும் என்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றில்லையா .இலவசக் கல்வி ,கட்டாயக் கல்வி ,பெண் கல்வி ,அனைவருக்குமான கல்வி என்பதெற்கெல்லாம் அர்த்தம் இல்லாமல் போய்விடும் .அரசியல்வாதிகள் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்று தன் விருப்பத்துடன் களத்தில் இறங்கினார்கள் .அவர்களுக்கு இந்திய மக்கள் வாய்ப்புக் கொடுத்தார்கள்.எனவே அரசியல்வாதிகள் அரசியல் செய்ய  சேவை வரி கொடுக்க வேண்டும் என்பதே நியாயம்..உண்மையில் அவர்கள் தங்கள் வருமானத்தில் 50 % சேவை வரி கொடுக்க வேண்டும். முதலில் சேவை வரியை நீங்கள் கொடுக்க முன் வாருங்கள் .அப்புறமாய் மக்களிடம் கேளுங்கள்.சேவை வரி விதிப்பதுதான் உங்கள் சேவை என்றால் எங்கே போய் முறையிடுவது?


No comments:

Post a Comment