Sunday, August 4, 2013

Philosophy

தத்துவம் 
நாகரிக வாழ்க்கையில் நாம் பல அடிப்படை நெறிமுறை களையே கொச்சைப்படுத்தி விடுகின்றோம். புதிய நெறி முறைகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் போது சமுதாயத்தின் நலனையும் மனதிற் கொள்வதில்லை .இப்படி பல புதிய நெறிமுறைகள் பலராலும் ஏற்படுத்தப் படும் போது முழு சமுதாயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாததால் தீராத சிக்கல்கள் உண்டாகின்றன .
எந்த ஓர் அமைப்பும் அதன் காலப் போக்கில் சமநிலையை அடையும் .அது  நிலையான எல்லோருக்கும் நலம்பயக்கின்ற  இயற்கைச் சமநிலை .அதில் பேதம் இருப்பதில்லை .காலத்தில் ஏற்படும் மாற்றங்களினால் சமநிலையில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படலாம் .ஆனால் சமநிலையையே புரட்டிப் போட்டு இடத்தை இடம் மாற்றும் தேவை ஏற்படுவதில்லை .இன்றைய சமுதாயம் இத் தவறைச் செய்து வருகிறது .அதனால் சமுதாயத்தில் பல சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக ஆகிவருகிறது .

எந்த அதிர்வும் தொடர்ந்து ஓசையிட்டுக் கொண்டே இருப்பதில்லை .சம நிலையை மையமாகக் கொண்டு மேலும் கீழும் சென்று விட்டு இறுதியில் அதே சம நிலையில் அமைதி கொள்கிறது .இந்த இயற்கையை சமுதாயம் இன்னும் புரிந்துகொள்ளவே இல்லை

No comments:

Post a Comment