Friday, August 16, 2013

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் -டெல்லூரியம்-கண்டுபிடிப்பு
ஆஸ்திரியா நாட்டின் ஒரு பகுதியில் (ஏழு மலை) வெண்மையும் ,நீலமும் கலந்த  ஒரு கனிமம் கிடைத்தது.இது முதலில் தங்கத்த்தின் ஒரு கனிமம் என எண்ணினர் .1782 ல் சுரங்கப் பொறியாளரான முல்லர் வான் ரிச்சன் ஸ்டெயின்(Muller von Reichenstein).இதை வேதியியல் பகுப்பாய்விற்கு உட்படுதித்தி ஆண்டிமணி ஒத்த ஒரு திண்மப் பொருளைப் பிரித்தெடுத்தார் .எனினும் அவரால் அது டெல்லுரியம் என்ற புதிய தனிமம் என்பதை தெரிவிக்க முடியவில்லை .
1798 ல் ஜெர்மன் நாட்டு வேதியியலாரான காலாப்ரோத், முல்லர் செய்த அதே சோதனையைச் செய்து அத்திண்மம் டெல்லூரியம் என்பதை உறுதியாகத் தெரிவித்தார்.டெல்லஸ் என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு பூமி என்று பொருள் .
பண்புகள் 
டெல்லூரியம் மிக அரிதாக தனித்தும் காணப்படுவதுண்டு.எனினும் பெரும்பாலும் இது தங்கத்துடன் இணைந்து தங்க டெல்லூரைடா கிழாவரைட்(Calaverite) என்ற கனிமமாகக் கிடைக்கின்றது .வேறு சில உலோகங்களுடனும் இணைந்தும் காணப்படுகின்றது .படிக உருவ டெல்லூரியம் வெள்ளி போன்ற வெண்ணிறத் தோற்றம் கொண்டுள்ளது .உடைந்து நொறுங்கி மிக எளிதாகப் பொடியாகின்றது.டெல்லூரிக் அல்லது டெல்லூரஸ் அமிலக் கரைசலிலிருந்து டெல்லூரியத்தை வீழ் படியச் செய்து படிக உருவற்ற டெல்லூரியத்தைப் பெறலாம் .இது படிக உருவற்றதா அல்லது சிறு சிறு நுண் படிகங்களின் தொகுப்பா என்பது உறுதியாகத் தெரியவில்லை .

டெல்லூரியம் நேர் மின் வகைக் குறைக்கடத்தியுமாகும் (N-type semiconductor) .இது ஒரு குறிப்பிட்ட சில திசைகளில் அணுக்களின் அணி வகுப்பைப் பொருத்து கூடுதலான மின் கடத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது .இது அதன் திசையொவ்வாப் பண்பாகும் .இதன் மீது ஒளி விழும் போது இதன் கடத்து திறன் அதிகரிக்கின்றது. இதை வெள்ளி செம்பு தங்கம் டின் போன்ற தனிமங்களில் வேற்றுப் பொருளாகக் கலக்க முடியும் .காற்றில் பச்சை கலந்த நீல நிறச் சுவாலையுடன் டெல்லுரியம் , டை ஆக்சைடை உமிழ்ந்து எரிகின்றது .உருகிய டெல்லுரியம் இரும்பு ,செம்பு, எவர்சில்வர் போன்றவற்றை அரித்தெடுக்கின்றது .டெல்லுரியமும் அதன் சேர்மன்களெல்லாம்  நச்சுத்தன்மை கொண்டிருப்பதால் அவற்றைக் கவனமாகக் கையாளவேண்டும்.டெலூரியம் மாசாகக் காற்றில் கலந்திருக்கும்போது அது வெள்ளைப் பூண்டின் நெடியுடன் மணக்கும்.
Te என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய டெல்லூரியத்தின் அணு எண் 52 அணு நிறை 127.60 ,அடர்த்தி 6240 கிகி/கமீ. இதன் உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 723.2 K, 1270 K ஆகும் .
பயன்கள் 

டெல்லூரியத்தின் சேர்க்கையினால் செம்பு மற்றும் எவர்சில்வர் இவற்றின் பட்டறை இணக்கம் மேம்படுகின்றது .ஈயத்துடன் சேர்க்க அது கந்தக அமிலத்தால் அரிக்கப்படும் தன்மை பெரிதும் குறைகின்றது .ஈயத்தின் வலிமையை அதிகரிப்பதுடன் அதன் கடினத் தன்மையும் மேம்படுகின்றது .சுரங்க வெடிகளுக்கான மேலுறைப் பொருளில் ஒரு முக்கிய சேர்மாப் பொருளாக டெல்லூரியம் உள்ளது .குளிரைக் கட்டுப்படுத்துவதற்கான வார்பிரும்பில் இது சேர்க்கப்படுகின்றது .பீங்கான் பொருட்களில் டெல்லூரியம் பயன் தருகின்றது  

No comments:

Post a Comment