Wednesday, August 21, 2013

Mind without fear

Mind without fear
எதற்கும் தீர்மானமாய் இல்லாவிட்டாலும் ஏறக்குறைய அதற்கு ஓரளவு நெருக்கமாக இருக்கக் கூடிய ஒரு முடிவு செயலில் இறங்குவதற்கு முன்னர் மனத்தில் இருக்கவேண்டும் .அப்படியொரு முடிவை முன் தீர்மானிக்காமல்,வருவது வரட்டும்,வரும்போது பார்த்துக் கொள்வோம் என்ற அலட்சிய மானப்பான்மையோடு செயலில் இறங்குவது அச் செயலை முடிக்கும் மட்டும் மனத்தில் இனம் புரியாத அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.செயலின் பயனூறுதிறன் குறைந்து போவதும்,மனத்தில் ஏற்படும் தாக்கத்தினால் சோர்ந்து போவதும், ,விபரீத முடிவுகளைச் சட்டெ எடுத்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதும் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்தொடர்கின்றன. ஒரு முடிவை மனத்தில் நிறுத்தி வைத்துக் கொண்டு செயலைத் தொடங்கு என்று இதனால்தான் அறிர்கள் ளைஞர்களுக்கு அறிவுரை கூறுகின்றார்கள். 
திசை மாறும் போது செல்லும் திக்கும் மாறும் அதனால் சென்றடை யும் இடமும் சென்றடைமுடியாத் தொலைவாகும் என்ற உண்மையை அறிந்து வைத்திருப்பதைப் போல இந்த அறிவுரையின் மெய்ப்பொருளை புரிந்து கொள்ளவில்லை.செயலை ஒரே நோக்கத்தோடு மேற்கொள்ளாமல் இடையிடையே ஊடுறுவும் வேறுபட்ட நோக்கங்களின் தாக்கத்தினால் மாறுபட்ட செயல்களில் ஈடுபடும் போது முறையான முன்னேற்றம் தடைப்பட்டு பாதிப்பங்கை இழந்து விடுகின்றது. 
சரியான செயலை சரியாகச் செய்ய தீர்மானம் டுக்கும் ஒவ்வொரு முறையும் நம்மை நாமே அதற்குத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.நாம் மேற்கொள்ளும் செயல்கள் நாம் ஏற்கனவே திட்டமிட்டு இறுதி செய்த முடிவை நோக்கி அழைத்துச் செல்லுமா என்பதை பலமுறை நம்மை நாமே கேட்டுக் கொண்டு நடுவுநிலைமையோடு அலசி ஆராய்ந்து தெளியவேண்டும் .பலத்தை ஒருபங்கும் பலவீனத்தை இரண்டு பங்குமாக எடைபோட்டால் தான் பகுப்பாய்வு உண்மை நிலைக்கு ஓரளவு நெருக்கமாக இருக்கும்.நோக்கத்தில் கொண்டுள்ள குழப்பம் நம்மை சரியான திசையில் செல்ல வழிகாட்டுவதில்லை.இந்தக் குழப்பம் மெய்ப்பொருளை அறிய முடியாமற் செய்து விடுகின்றது .குழப்பங்கள் ஒன்றைத் தவறாகப் புரிந்து  வைத்திருப்பதினாலேயே வருகின்றன.தவறாகப் புரிந்து கொள்வதையே வழக்கமாகக் கொள்வதை அனுமதிப்பதாலேயே குழப்பம் ஏற்படுவது தவிர்க்கயியலாததாகி  விடுகின்றது. 


No comments:

Post a Comment