Thursday, August 1, 2013

Short story

சிறு கதை 
எண்ணங்களையும் சிந்தனைகளையும் வளப்படுத்திக் கொள்ளாமல் வாழ்க்கையின் போக்கிலேயே சென்று சென்றுகொண்டிருக்கும் இந்தியர்கள் பொதுவாக நேர்மறையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிட்டு எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதில் விருப்பமுள்ளவர்களாக இருகின்றார்கள் .மறைமுகமான முயற்சியால் எதிர்மறையான எண்ணங்களினால் ஏற்படும் தாக்கத்தின் அளவை மதிப்பிடமுடிவதில்லை.இந்தியர்களிடம் காணப்படும் பொதுவான இப்பண்பை மனதிற் கொண்டு புனைந்து சொல்லப்படும் ஒரு மேலைநாடும் கதை.
 .
அறிவியல் மெத்த வளர்ந்த ஒரு மேலை நாட்டில் ஒரு வித்தியாசமான பொருட்காட்சி .அதில் இறந்து போன பிரபலங்களின் மூளைகளை பதப்படுத்தி காட்சிப் பொருளாக வைத்திருந்தார்கள் ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒரு வரிசை என பன்னாட்டு அறிஞர்கள் பெரியோர்கள், கலைஞர்களின் மூளைகள் இருந்தன 
ஒவ்வொரு மூளையையும் மதிப்பிட்டு மதிப்பை ஒரு விலையால் குறிப்பிட்டிருந்தார்கள் .ஜெர்மானியர்களின் மூளை $400,- $ 500,இஸ்ரேலியரின் மூளை $ 500-$600,ஜப்பானியரின் மூளை $ $600-$700, அமெரிக்கர்களின் மூளை -1000-1200,அரேபியர்களின் மூளை $8000-$9000 என்றும் இந்தியர்களின் மூளை $10000-$12000 என்றும் மதிப்படப்படிருந்தது. இதைப்பார்த்த இந்தியப் பெண்மணி இந்தியர்களின் மூளை உயர்வாக மதிப்பிடப்பட்டிருப்பதாக அறிந்து மகிழ்ந்தார் .இருப்பினும் அவருக்கு ஒரு சந்தேகம். மேலை நாட்டினரின் மூளைகள் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டிருப்பதை  அவரால் நம்பவே முடியவில்லை தன் சந்தேகத்தை அங்குள்ள அதிகாரியிடம் கேட்டும் விட்டார் அதற்கு அவர் சொன்ன பதில் .ஒரு புதிய காரை வாங்கியவுடன் பிடிக்காமல் விற்க நினைத்தால் அதன் மதிப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும் .பயன் பட்டு கொஞ்ச காலம் கழிந்து விற்றால் அதன் மதிப்பு அதற்கேற்றவாறு குறையும் .எது அதிகம் பயன்படுத்தாமல் புதிது போலவே இருக்கிறதோ அதன் விலை அதிகமாக இருக்கும். இந்தியர்களின் மூளை பயன்படுத்தப்படாமல் புதிது போல இருப்பதால் அதன் மதிப்பு அதிகம் என நிர்ணயம் செய்தோம் என்று கூறினார்.ஒரு மூளை புதியது, பழையது என்று எப்படி முடிவு செய்தீர்கள் என்று வினவ அவரும் மூலையில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இதை முடிவு செய்தோம் என்றார் .ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பொருட்காட்சிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.இப்போது சில மாற்றங்களைச் செய்திருந்தார்கள். மூளை -50 ஆண்டுகளுக்கு முன்பு ,மூளை தற்பொழுது என்று இனம் பிரித்து வைத்திருந்தார்கள். மூளை-தற்பொழுது வரிசையில் இந்தியர்களின் மூளைகள் மதிப்பு அதிகமாக இருந்தது.மேலும் அது எதிர் குறியுடன் இருந்தது. இதைப்பார்த்த ஒரு பார்வையாளர் வினவ ,அதற்கு ஒரு அதிகாரி ' மூளை தவறான வழிகளில் பயன்படுத்தப் பட்டிருப்பதால் அதன் மதிப்பு எதிர் குறியுடையதாக குறிப்பிட்டோம் என்றார்.

இதியர்கள் பழங் கதை பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். நாங்கள் அதைச் செய்தோம்,இதைச் செய்தோம் என்று முன்னோர்கள் சாதனையை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் ..இந்தியர்கள் எப்போதுதான் நேர்மறையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் மேற்கொண்டு செயல்படப்போகின்றார்களோ ?

No comments:

Post a Comment