Sunday, August 11, 2013

Philosophy

தத்துவம்  
வாழ்க்கைப் பாதையில் எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். இந்தப் பாதையின் தொடக்கமும் முடிவும் எல்லோருக்கும் ஒன்றுதான் என்றாலும் இடையில் ஒவ்வொருவரும் வேறுபடுதித்திக் கொள்கின்ற பாதைகள் மாறுபடுகின்றன.கருவறையிலிருந்து புறப்பட்டு மயானம் வரைதான் எல்லோரும் பயணிக்கின்றார்கள்.கருவறையிலிருந்து கொஞ்சம் தூரம் எல்லோருக்கும் பாதை ஒன்றாகத்தான் இருக்கிறது.மக்கள் நடந்து விட்டுப்போன வழித் தடங்கள் அங்கிருந்து பலவாகப் பிரிகின்றன. ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்து ஒன்றுக்கொன்று எதிர் திசையில் விலகிச் செல்கின்றன.ஒரு பாதையில் எப்போதும் கூட்டம் அதிகமாகவும் மற்றொரு பாதையில் குறைவாகவும் இருப்பதைக் காணமுடிகின்றது. கூட்டம் அதிகமாய் செல்லும்

பாதையில் உழைக்காமலேயே சம்பாதிக்க நினைப்பவர்களும்,தேவையின்றி சம்பாதிக்க விரும்புபவர்களும் போட்டி போட்டுக் கொண்டு,ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு பயணிக்கின்றார்கள்.கூட்டம் அதிகமில்லாத பாதையில் உழைத்தும் சம்பாதிக்கத் தெரியா மக்கள் ஏமாந்து,ஏமாந்து சோர்ந்து போய் தள்ளாடிக் கொண்டே செல்கின்றார்கள்.கூட்டம் கூட்டமாய் பின் வரும் மக்கள் வழி காட்டி இல்லாததால் எந்தப் பாதையைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் தடுமாறுகின்றார்கள்.தேர்வு செய்ய அவகாசம் எடுத்துக் கொள்ள அங்கே வாய்ப்பில்லாததால் சட்டென யோசனையின்றி தவறான பாதையைத் தேர்வு செய்துவிடுகின்றார்கள் .அதிக மக்கள் அந்தப் பாதையில் செல்வதால் அதுவே சரியான பாதை என்று முடிவு எடுத்து விடுகின்றார்கள். அந்தப் பாதையில் கூட்டம் கூட்டம் அதிகரிக்க,நெரிசல் காரணமாக ஒருவரை ஒருவர் பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் எதிரிகளாக்கிக் கொண்டு விடுகின்றார்கள். உயிருக்குப் பாதுகாப்பில்லாத அந்தப் பாதையில் எதுவும் நடக்கலாம். மற்றொரு பாதையில் கூட்டம் இல்லை.போட்டி பொறாமையில்லை, பகமையில்லை.தாகத்தால் தவித்து,நா வறண்டு கீழே விழுந்து கிடப்பவர்களை பின்னால் வருபவர்கள்  தாகம் தீர்த்து உதவி செய்து கூடவே அழைத்துச் செல்கின்றார்கள்.பாதையில் வழிப்பறியில்லை,பகையில்லை, கொலை,கொள்ளையில்லை,தனியே தொடர்ந்து சென்றாலும் பயமேயில்லை. தவறான பாதையைத் தேர்வு செய்யத் தூண்டியது எது? அந்தப் பாதையில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே  போவதற்கு என்ன காரணம் .பயம், பாதுகாப்பின்மை,பயனின்மை இவ்வளவும் இருந்தும் மனம் அந்தப் பாதையை மனம் நாடுவது ஏன்?

சரியான பாதையில் செல்வோருக்கு தவறான பாதை பற்றி ஏதும் தெரியாததால் கருத்துச் சொல்வதில்லை.தவறான பாதையில் செல்வோருக்கு தவறான பாதையில் ஏன் செல்கிறோம் என்பது தெரியாது.சரியான விடை இன்னும் கிடைக்கவில்லை.தேடிக் கொண்டே காலங்கள் கழிக்கின்றன .

No comments:

Post a Comment