Wednesday, August 21, 2013

Philosophy

தத்துவம் 
இந்து தர்மத்தில் சொல்லப்படும் வாழ்வியல் தத்துவங்களுள் ஒன்று அவா அறுத்தலாகும்.அவா அறுத்தல் என்பது மனத்தில் தேவையின்றி எழும் ஆசைகளைத் தானே முயன்று ஒழித்துக் கொள்ளுதலாகும். ஆசைகளை ஒடுக்காமல் வெற்றி பெற்றாலும் அது உண்மையில் வெற்றியாகாது.தோல்விகளிலும் மோசமான தோல்வியாகும்.ஏனெனில் அப்படிப்பட்ட வெற்றியை எல்லோரும் விரும்பும் நிலை உருவாக அதுவே ஓர் ஊக்கக் காரணியாகி ஊடுபரவி மக்களிடையே நிலைப்படுகின்றது .அதுபோல ஆசைகளை ஒடுக்கித் தோல்வியே அடைந்தாலும் உண்மையில் அது தோல்வியேயாகாது.அது வெற்றிகளில் மேலான வெற்றியாகும்.ஏனெனில் அப்படிப்பட்ட தோல்வி பின் வரும் மக்களுக்கு ஒரு வாழ்வியல் பாடமாக அமைந்து தவறான புரிதலால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து  நிரந்தரமான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.அது சாகாத சமுதயத்திற்கு தேவைப்படும் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகும் .திருப்தியில் அவா வருவதில்லை,அதிருப்தியில் அவாவிற்கு அளவில்லை .இந்து தர்ம நூல்கள் தரித்திரத்துள் பெரிய தரித்திரம் இந்த அதிருப்திதான் என்று கூறுகின்றன .
தரித்திரத்தை முதுகில் சுமந்து கொண்டு யாரேனும் வாழ்க்கைப் பாதையில் வாழ்க்கை முழுதும் பாரத்தோடு நடந்து செல்வார்களா . அவா அற்ற நிலையே சிறந்த செல்வம்,அது போன்றதொரு செல்வம் இப் பிரபஞ்சத்த்தில் எங்குமில்லை,அவா அற்றவன் கடவுளுக்கும் மேலானவன் என்று திருவள்ளுவர் கூறுவார்.


No comments:

Post a Comment