Monday, August 26, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிம்
ஒரு நாடு செழிப்பாக முன்னேறவில்லை என்றால் அதற்கு பொது மக்களை விட அரசியல்வாதிகளே அதிகம் பொறுப்பாகின்றார்கள்.அரசியல்வாதிகள் தவறுகளைச் செய்வதற்காகவே அரசியலுக்குள் ஆர்வத்துடன் நுழைகின்றார்கள்.யாருக்கும் தெரியாமல் தப்பு செய்யும் நுட்பத்தை நன்றாகக் கற்றுத் தேர்ந்திருக்கின்றார்கள்.அப்படியே மாட்டிக்கொண்டாலும் தப்பித்துக் கொள்ளும் முறைகளையும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.அரசியல் வாதிகளுக்குள் இருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம் அவர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கிறது. இமாலயத் தவறுகளைச் செய்தாலும் ஒரு அரசியல் வாதி தண்டிக்கப் படுவதில்லை அதைக் கண்டு பொது மக்கள் சிறு தவறு களைச் செய்ய அச்சப்படுவதில்லை. இது தவறுகளின் வளர்ச்சி வரலாறு .
அரசியல் வாதிகள் தாங்கள் செய்யும் தவறு களை மறைக்க அது போன்ற வளர்ச்சியை விரும்புகின்றார்கள் .இப்படிச் செய்யும் போது மக்களைக் குற்றவாளியாக்கி விட்டு தங்களை மிக எளிதாக நிரபராதி யாக்கிக் கொள்கின்றார்கள் .மக்களிடம் தவறுகள் பரவினாலும் அதை முழுமையாகச் செய்து முடித்து எளிதாகப் பயன் துய்க்க முடிவதில்லை .தவறு செய்வதில் தவறு செய்வதால் சிக்கிக்கொண்டு விடுகின்றார்கள்.அரசியல்வாதிகளைப் போல மறைவாகவும், பாதுகாப்பாகவும் தவறுகளைச் செய்யமுடியாததால் மக்கள்
அரசியல்வாதிகளின் துணையுடன் தவறுகளைச் செய்யும் முயற்சியில் துணிவு கொண்டு வருகின்றார்கள்
இதனால் இந்தியாவின் முன்னேற்றம் கிள்ளி எறியப்பட்டு விட்டது என்பதை பெரும்பான்மை மக்களோ அரசியல்வாதிகளோ இன்னும் உணரவில்லை என்பது இந்தியாவின் தூரதிருஷ்டமே.

மக்கள் பெருக்கம் மிகுந்த நாட்டில் ஒழுக்கம் மிக மிக முக்கியம். ஒழுக்கக் கேடு வரும் போது அது இளம் நிலையிலேயே தடுக்கப்பட்டு ஒழுக்கம் நிலை நாட்டப்படவேண்டும்.அரசியல்வாதிகளின் முக்கியமான கடமைகளுள் ஒன்று நாட்டில் ஒழுக்கத்தை கட்டிக் காப்பதாகும்.ஆனால் இந்திய அரசியல்வாதிகளிடம் அத்தகை தன்மை சிறுதும் இல்லை  
அவர்கள் எப்போதும் மக்களிடையே குழப்பத்தை ற்படுத்திதாயம்
பெறுவதிலேயே குறியாக இருகின்றார்கள்.

No comments:

Post a Comment