Friday, August 16, 2013

Cartoon

கார்ட்டூன் 
நான்கு சுடிதார்கள்.புதிய கலர்,புதிய டிசைன்.ரூபாய் 6000 மதிப்புள்ள இவை உங்களுக்காக ரூபாய் 1999 க்குத் தருகின்றோம்.இச் சலுகை இரண்டு நாட்களுக்கு மட்டுமே.முந்துங்கள் .இதனால் உங்களுக்கு ரூபாய் 4001 மிச்சமாகின்றது.இதை வியாபாரிகள் எப்படி வேண்டுமானாலும் சொல்லமுடியும்.”ரூபாய் 20000 மதிப்புள்ள இவை ஆடி தள்ளுபடியில் உங்களுக்கு ரூபாய் 1999 க்குக் கிடைக்கின்றது .இன்றே ரூபாய் 18001 சேமியுங்கள்” .
ரூபாய் 10000 விலைபோகாத மனையை "ரூபாய் இரண்டு லட்சத்திற்கு வீட்டு மனை.அருகில் கல்லூரிகள்,மருத்துவ மனைகள்,வாங்கிய உடனே பல லட்சங்களுக்கு விலை போகக் கூடியது .20 அடியில் சுவையான குடிநீர்,24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து,என மயக்கும் மொழிகளை அள்ளி விடுவார்கள் .கேட்பார் கேட்டால் கேப்பையில் நெய் வடியிது என்றும் ,வெள்ளைக் காக்காய் தலைகீழா பறக்குது என்றும் கூறத்தான் செய்வார்கள் . மூளையைச் சலவை செய்து,தலையை மொட்டையடித்து,காதிலே பூச்சுற்றி,நெற்றியிலே நாமம் போட்டு விட்டு,மார்பிலே கொஞ்சம் சந்தனம் பூசு வார்களாம்.வரம்பு மீறி ஏமாற்றினாலும் அதற்கும் மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள் .அது ,அது அதுதான் நம் இந்தியா. 


No comments:

Post a Comment