Monday, August 5, 2013

Micro aspects of developing inherent potentials

Micro aspects of developing inherent potentials
நினைவாற்றல் என்பது மனத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தோரிடம் அதிகம் காணப்படுகின்றது .பொதுவாக முன் திட்டமிட்டு ஒவ்வொரு செயலையும் நிதானமாகவும் உறுதியாகவும்,அமைதியாகவும் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்களிடம் நினைவாற்றல் மிகுந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்கள்,அதிகம் ஆசைப்படாதவர்களிடம் நினைவாற்றல் குறைவதில்லை .நல்லொழுக்கங்களை சிறிதும் வழுவாமல் கடைப்பிடிப்பவர்களிடம் நினைவாற்றல் மங்கிப் போய்விடுவதில்லை .
மீண்டும் நினைவு படுத்திப் பயன் பெறவேண்டிய எண்ணத்தை பயனில்லாத ,வேண்டாத வேற்று எண்ணங்களே 'வைரஸ் ' கிருமிகள் போல காலப் போக்கில் அழித்து விடுகின்றன.
நல்லறிவைப் பெற வேண்டும் என்று சொன்ன சான்றோர்கள் அறிவுரை கேட்டு திருக்குறள் ,அகராதி போன்ற பல நன்னூல்களை வாங்கி வைத்திருப்போம் .அதன் பயனை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பைத் தேடி விரும்பாத போது அந்த நூல்கள் இடம் மாறி காலப் போக்கில் மாயமாய் மறைந்து போகும் . மனதில் இருக்கும் எண்ணங்களும் இப்படித்தான்.பிற்பயன் கருதி நினைவில் பதியவைத்துக் கொண்ட நல்ல எண்ணங்களை மனத்தைக் கட்டுப்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் தவறான வேற்று எண்ணங்கள் பதிவைத் திருடி மெல்ல மெல்ல அழித்து விடுகின்றன .இது நினைவாற்றலை இழப்பதாகும் .நினைவாற்றலை மேம்படுத்த மேற்கொள்ளும் பயிற்சிகளுள் முக்கியமானது நம் மனதை நாமே கட்டுப்படுத்தி சரியான தேவையான எண்ணங்கள் அழிந்து போய்விடாமல் பாதுகாப்பாகப் பதிவு செய்வதாகும் ஒரு சமயத்தில் ஒன்றைப் பதிவு செய்தால்தான் வலிமையாக ப் பதிவு செய்யமுடியும் என்பதைத் தெரிந்திருந்தும் நாம் செய்யும் பெரிய தவறே இது.

வாழ்க்கையை நம்மோடும் வாழ்க்கைப் பயனைப் பிறரோடும் தொடர்பு படுத்தி வாழும் போக்கை நெறிப் படுத்திக் கொண்டால் நினைவாற்றால் மேம்படும் .மற்றவர்கள் மீது பொறாமை கொண்டு அவர்களைப் பற்றித் தவறாக நினைக்கும் போது ஒவ்வொருவரும் ங்களையே மறந்து விடுகின்றார்கள்.அவர்கள் அவர்களாக இல்லாமல் எண்ணப்படும் எந்த எண்ணங்களும் அவர்களுக்கு உதவுவதில்லை. 

No comments:

Post a Comment